22.2.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. உ.பியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாடி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக்கும் என முடிவு.
* காங். வங்கிக் கணக்கில் இருந்து ரூ.65 கோடியை எடுத்தது வருமான வரித்துறை – ஜனநாயக விரோதம் என குற்றச்சாட்டு
* பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் மோடி அரசுக்கு மிகப் பெரிய சவால் என்கிறார் அரசியல் ஆய்வாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.
* டில்லியை நோக்கி முன்னேறுபவர்கள் மீது தாக்குதல் காவல்துறை சுட்டு விவசாயி பலி: 160 பேர் படுகாயம்; பஞ்சாப், அரியானா எல்லையில் பதற்றம்
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை – 2024, பெண்கள் முன்னேற்ற கொள்கைகள், கல்வி, பயிற்சி, பணியிடத்தில் பாதுகாப்பு என்ற தளத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* விவசாயிகளின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி விவசாயிகளை கொன்றதற்கு பாஜக பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என ஆவேசம்.
* மோடியின் ராமராஜ்ஜியத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வேலை பெற முடியாது. இந்தியாவில் உள்ள வர்க்கம் மற்றும் ஜாதிப் பிளவுகளால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு ஊடகங்களிலோ அல்லது பெரிய தொழில் துறைகளிலோ அல்லது அதிகாரத்துவத்திலோ அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லை என தனது இந்தியா பயணத்தில் கான்பூரில் ராகுல் பேச்சு.
தி இந்து:
* ‘இந்தியா’ கூட்டணி வேறுபாடுகளை புறக்கணித்து செயல்பட வேண்டும் என்கிறார் தேஜஸ்வி.
தி டெலிகிராப்:
* மட்டுவா சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதார் அட்டைகளை செயலிழக்கச் செய்வது ஒரு அரசியல் விளையாட்டு என்று குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, மோடி அரசின் சதியை தனது அரசு தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
– குடந்தை கருணா
Thursday, February 22, 2024
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Tags
# ஏட்டுத் திக்குகளிலிருந்து...
About Viduthalai
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Labels:
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment