சண்டிகர் மேயர் திடீர் விலகல் : பிஜேபியின் தில்லு முல்லு அம்பலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 19, 2024

சண்டிகர் மேயர் திடீர் விலகல் : பிஜேபியின் தில்லு முல்லு அம்பலம்

சண்டிகர்,பிப்.19- பஞ்சாப் – அரி யானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது. இதனிடையே, சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், “இந்தியா” கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர்.
வாக்குச்சீட்டு முறைப்படி தேர் தல் நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி எண் ணினார். காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் மனோஜ் சோன்கர் சண்டிகர் மேயராக பதவியேற்றார்.

இதனிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக் கையின் போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூகவலைதளத்தில் வைர லானது. இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 5ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேர்தல் நடத்திய அதிகாரியை கடு மையாக எச்சரித்தார். தேர்தல் நடத் திய அதிகாரி ஜனநாயக படுகொலை யில் ஈடுபட்டதாக விமர்சித்தது. மேலும், சண்டிகர் மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரையும் கால வரையின்றி ஒத்தி வைக்க உத்தர விட்டு வழக்கை (இன்று) பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மேயர் பதவியிலிருந்து மனோஜ் சோன்கர் விலகினார். மனோஜ் சோன்கர் தனது பதவியிலிருந்து நேற்று இரவே (18.2.2024) விலகினார். பா.ஜ.க. தலைமையிடம் ஆலோசனை மேற்கொண்டபின் மனோஜ் சோன்கர் மேயர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

No comments:

Post a Comment