புதுடில்லி, பிப். 3- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 3-ஆம் நாளான நேற்று (2.2.2024) மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சித் தலைவரான மல்லிகார் ஜுன கார்கே ஜார்க்கண்ட் விவகாரத்தை எழுப்பினார். இது தொடர்பாக அவர் பேசிய தாவது:
ஒரு மாநிலத்தில் முதல மைச்சர் பதவி விலகும்போது பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ள கட்சியை ஆளுநர் ஆட்சிஅமைக்க அழைக்க வேண்டும். ஆனால் ஜார்க் கண்ட்டில் ஜேஎம்எம் கட்சி யின் புதிய சட்டமன்ற குழு தலைவர் சுமார் 20 மணி நேரம் காத்திருந்த பிறகே ஆளுநரை சந்திக்க முடிந்தது. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் இருந்தபோதிலும் அவர் உடனே ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை.
ஆனால் பீகாரில் நிதிஷ் குமாரின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டு, 12 மணி நேரத்தில் அங்கு புதிய அரசு பதவியேற் றுள்ளது. பீகாரில் நடந்தது ஏன் ஜார்க்கண்டில் நடக்க வில்லை? இது வெட்கக்கேடா னது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
இதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் எழுந்து, “மிகப்பெரிய நில மோசடியை ஜார்க்கண்ட் மாநிலம் கண் டது. இதுவேஹேமந்த் சோர னின் பதவி விலகலுக்கு வழி வகுத்தது. ஒரு முதலமைச்சர் எவ்வாறு நில மோசடியில் ஈடுபடலாம்? அந்த முதலமைச் சரை காங்கிரஸ் பாதுகாத்து வருகிறது. ஊழல் பற்றி காங்கி ரஸ் பேசவில்லை. காங்கிரஸின் மரபணுவிலேயே ஊழல் இருப்பதையே காட்டுகிறது. மேலும் ஒரு ஆளுநரின் நடத் தையை அவையில் விவாதிக்க முடியாது. ஆட்சி அமைக்க ஒருவரை ஆளுநர் அழைக்கும் முன்பாக அவர் திருப்தி அடைய வேண்டும்” என்றார்.
இதை ஏற்காத காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “ஏன் அந்த மாநிலம் தலைமை இல்லாமல் இருந்தது? ஏன் அங்கு இடைக் கால ஏற்பாடு செய்யப்பட வில்லை? என்று கேள்வி எழுப் பினர். பிறகு அவர்கள் வெளி நடப்பு செய்தனர்.
தொடர்ந்து பாரத் ராஷ்டிர சமிதி கேசவ ராவ் பேசும்போது, “எல்லா நேரங்களிலும் ஒரு அரசு இருக்க வேண்டும் என்று அரச மைப்பு சட்டம் கூறுகிறது. இந்த நாடு அரசமைப்பு சட் டத்தின் மூலம் இயங்க வேண் டும்” என்றார்.
இதற்கு காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர். டி.கே.சுரே ஷின் சர்ச்சைக்குரிய தனி நாடு கருத்தை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்.க்கள் அவையில் எழுப்பினர்.
நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த் தனை வழக்கில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த சோரன் 31.1.2024 அன்று இரவு அம லாக்கத் துறையால் கைது செய் யப்பட்டார். கைது நடவடிக் கைக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் ஹேமந்த் வழக்கு தொடர்ந்தார். அவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள், “இந்த விவ காரத்தில் மனுதாரர் ஏற்கெ னவே ஜார்க்கண்ட் உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனு நிலுவையில் இருப்பதாகவும் எங்களுக்கு தெரிய வருகிறது. இந்த மனுவை விரைந்து விசா ரிக்குமாறு மனுதாரர் முறையிடலாம். இந்த விவகாரத்தில் தற்போதைக்கு நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய் தனர். நில மோசடி தொடர் பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அம லாக்கத்துறை அனுப்பிய சம் மன்களுக்கு எதிராக ஜார்க் கண்ட் உயர் நீதிமன்றத்தை ஹேமந்த் ஏற்கெனவே அணுகியிருந்தார். ஹேமந்த் சோரனின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று (2.2.2024) தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலை மேலும் 5 நாட்களுக்கு ராஞ்சி சிறப்பு நீதி மன்றம் நீட்டித்தது.
No comments:
Post a Comment