புதுடில்லி,பிப்.20– டில்லி ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் மூலக் கூறு மருத்துவத் துறையில் ஆய்வு மாணவராக உள் ளார் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் நாசர்.
கடந்த ஆண்டு பிப்ர வரி மாதத்தில் பல்கலைக் கழக மாணவர் மன்ற அலுவலகத்தில் புகுந்து மாணவர்களைத் தாக்கி, தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் படங் களை உடைத் தெறிந்தது ஏ.பி.வி.பி. என்னும் பா.ஜ. க.வின் மாணவர் அமைப்பு.
இதைத் தடுக்கும் முயற்சியில் நாசர் தாக்கப் பட்டார். முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் நின்று பாஜக மாணவர் அமைப்பின் இந்த வன் முறையைக் கண்டித்தன.
ஆனால், வன்முறையா ளர்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத ஜே.என்.யு. நிர் வாகம், நாசரின் ஆய்வுப் படிப்பை முடக்கும் வேலைகளை செய்யத் தொடங்கியது.
நாசரின் ஆய்வுக்கு வழிமுறை வழங்கி வந்த மேற்பார்வையாளரான பேராசிரியர் சைலஜா சிங் அதைத் தொடர முடி யாது என்று விலகினார்.
கூடுதலாக பல வழி களில் நிறுவன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
புதிய மேற்பார்வையா ளரை நியமிக்க வேண்டிய பல்கலைக் கழகம், அதைச் செய்யாமல் பல மாதங்கள் இழுத்தடித்தது.
இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் மேற் பார்வையிட செய்ய பேராசிரியர்கள் இல்லை என்னும் காரணத்தை முன்வைத்து, நாசர் ஆய் வுப் படிப்பைத் தொடர முடியாது என்னும் கட்டாய வெளி யேற்றக் கடிதத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியது.
இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நாசர்.
இதை விசாரித்த நீதி பதி ஹரி சங்கர், நாசரை நீக்கியது பல்கலைக் கழக விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி, உடனடியாக அவரை சேர்த்து இரு வாரங்களுக் குள் புதிய மேற்பார்வை யாளரை ஒதுக்க வேண் டும் என்று ஜே.என்.யு. விற்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment