அக்கப்போர் செய்திகளைப் பரப்பிய திருப்பதி கோவில் கவுரவ தலைமை அர்ச்சகர் நீக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

அக்கப்போர் செய்திகளைப் பரப்பிய திருப்பதி கோவில் கவுரவ தலைமை அர்ச்சகர் நீக்கம்!

திருப்பதி, பிப்.28 சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பிய திருப்பதி ஏழு மலையான் கோவில் கவுரவ தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலுவை தேவஸ்தான அறங்காவலர் குழு பணி நீக்கம் செய்துள் ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலை யில் நேற்று (27-2-2024) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் அறங்காவ லர் குழு தலைவர் கருணாகர (ரெட்டி) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது ஏழுமலையான் கோவில் கவுரவ தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு வைப் பணி நீக்கம் செய்து அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
தேவஸ்தான நிர்வாகம், அறங்காவலர் குழு, அர்ச்சகர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மீது அபாண்டமான குற்றச்சாட்டு களை சுமத்தி அவதூறுகளை பரப்பிய காரணத்தால் அவரை பணி நீக்கம் செய்து அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது என்றும் அப்போது கூறினார். மேலும், தேவஸ் தானத்தில் பல்வேறு அடிப்படைகளில் ஒப்பந்த ஊழியர்களாகவும், தற்காலிக ஊழி யர்களாகவும் பணியில் இருக்கும் 9,000 பேருக்கு ஊதிய உயர்வு வழங்கவும் அறங் காவலர் குழு முடிவு செய்துள்ளது என்றார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவராக இருந்த ரமண தீட்சதலுவை அவருடைய பணி ஓய் வுக்குப் பின் தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு காரணங்கள் அடிப்படையில் கவுரவ தலைமை அர்ச்சகராக நியமித்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கவுரவ தலைமை அர்ச்சகராக நியமிக்கப்பட்ட அவர் அதன் பின் கைங்கரிய பணிகளில் ஈடுபட வில்லையாம்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாள் களுக்கு முன் அவருடைய ‘எக்ஸ்’ பக்கத்தில் தேவஸ்தான நிர்வாகத்தின் மீதும், தேவஸ் தான நிர்வாக அதிகாரி தர்மா (ரெட்டி), அர்ச் சகர்கள் ஆகியோர் மீதும் பல்வேறு குற்றச் சாட்டுகளை சுமத்தி ஒரு காட்சிப் பதிவு செய் யப்பட்டிருந்தது.
அதன் பின் அவர் அந்த காட்சிப் பதிவில் ஒலித்த குரல் என்னுடையது கிடையாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா (ரெட்டி) மீது அபாண்ட மான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக ரமண தீட்சதலு மீது தேவஸ்தானத்தின் அய்.டி. விங் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் அடிப்படையில் ரமண தீட்சதலு மீது திரு மலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதி மலையில் கூடி ஆலோசனை நடத்திய தேவஸ்தான அறங்காவலர் குழு அவரை பணி நீக்கம் செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

No comments:

Post a Comment