காப்பீட்டுத் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ள சென்னை பொது மருத்துவமனைக்கு பஞ்சாப் மருத்துவக் குழு வருகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

காப்பீட்டுத் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ள சென்னை பொது மருத்துவமனைக்கு பஞ்சாப் மருத்துவக் குழு வருகை

சென்னை, பிப்.18- ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு பஞ்சாப் மருத் துவக் குழுவினர் பார்வையிட வருகை புரிந்தனர்.

பஞ்சாப் மருத்துவக் குழு

இந்தியாவில் தரமான மருத்துவ கட்டமைப்பு டைய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை யில் உள்ளது. தமிழ்நாட் டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத் துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் கட்ட ணம் இல்லாமல் வழங் கும் வகையில் தமிழ்நாடு அரசால் 2009ஆம் ஆண்டு கலைஞர் காப் பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட் டது. பின்னர் இந்த திட் டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 16.2.2024 அன்று பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பபிதா கலேர் தலைமை யில் 5பேர் கொண்ட மருத்துவ குழு ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு நேரில் வந்தனர்.

பாராட்டு

அப்போது தலைமை மருத்துவர் தேரணி ராஜ னிடம் அரசு மருத்துவ மனைகளில் மேற்கொள் ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் நம்மை காக்கும் 48. முதலமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் உள் ளிட்டவற்றை தெளிவாக கேட்டறிந்தனர். குறிப் பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப் பீட்டு திட்டத்தை பஞ்சாப்பில் செயல்படுத் துவது குறித்தும், திட்டம் செயல்படும் விதம் குறித் தும் கேட்டனர்.
பின்னர் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவு, வி.வி.அய்.பி வார்டு உள்ளிட்ட பல்வேறு இடங் களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருத்துவ கட்டமைப்பு களையும், நவீன வசதி களையும் பஞ்சாப் மருத் துவ குழு வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment