மேகதாது - தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட கருநாடகம் வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் ஆணித்தரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

மேகதாது - தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட கருநாடகம் வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் ஆணித்தரம்

சென்னை, பிப். 24- மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கருநாடக அரசால் வைக்க முடியாது என்று சட்டப்பேரவை யில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்ட வட்டமாக தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை யில் 22.2.2024 அன்று மேகதாது அணை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன்,
“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறு தியானது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீண்டகாலம் தலைவரே நியமிக்கப்படாமல் இருந்தது. அதனால் அதிமுக ஆட்சியில் பிரச்சினை வர வில்லை. இம்மாதம் 11ஆம் தேதி நடந்த கூட்டத்தில் மேகதாது பிரச்சினை வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவிரி ஆணையத்தில் மேகதாது பிரச்சினை பற்றி விவாதிக்கக் கூடாது என்று வழக்கு தொடுத் துள்ளதையும் அன்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம்.

ஆனால் கருநாடகாவோ, ‘உச்ச நீதிமன்றம் அணை கட்டும் திட்டத்துக்கு எந்த தடையும் பிறப்பிக்கவில்லை. எனவே இத்திட்டம் பற்றி விவாதித்து, முடிவெடுத்து மத்திய நீர் ஆணை யத்துக்கு அனுப்பி வைக்கலாம்’ என்றது. மத்திய நீர் ஆணையத் தில் ஒன்றிய அரசின் சார்பில் உள்ள உறுப்பினரோ இது முடி யாது என்றார். கேரளா, பாண் டிச்சேரியும் இதேபோல் விவா திக்க முடியாது என்று தெரிவித்தனர். அன்று எந்தவித ஓட் டெடுப்பும் நடக்கவில்லை. கருத் துகள் மட்டுமே சொல்லப்பட் டது. கருநாடகாவை தவிர, மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மேகேதாட்டு திட்டத்தை திருப்பி அனுப்ப காவிரி ஆணைய தலை வர் ஒப்புக்கொண்டார்.

திருப்பி அனுப்ப ஒப்புக் கொண்ட இதே ஆணைய தலை வரே, மேகதாது திட்ட அறிக் கையை பரிசீலிக்க காவிரி ஆணை யத்துக்கு மீண்டும் அனுப்ப உள் ளதாக நமக்கு கடிதம் எழுதியிருந் தார். இதற்கு உடனே தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. இந்த விவகாரத்தில் நீதி மன்றத்தை நாடவுள்ளோம். ஜல் சக்தி அமைச்சகம், வனத் துறைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. உச்ச நீதி மன்றத்தால் மேகதாது திட்டம் அனுமதிக்கப்படாதது என்பதை அக்கடிதத்தில் குறிப் பிடப்பட்டது.

தமிழ்நாட்டின் இசைவைப் பெறாமல் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கருநாடகாவால் எடுத்து வைக்க முடியாது என் பதை ஆணித்தரமாக தெரிவித் துக்கொள்கிறேன். கருநாடகா வில் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். பாஜக, காங்கி ரஸ் என யார் வந்தாலும் இதைத் தான் செய்கிறார்கள். சித்தரா மையா எனக்கு வேண்டியவர் தான். அவரும் அப்போது இருந்தே இந்த விஷயத்தில் இப்படித்தான் செய்கிறார். அவர்கள் நிதி ஒதுக்கினாலோ, மேகதாதுவை கட்டியே தீருவோம் என்று ஆவேசமாக வசனம் பேசினாலோ அச்சப்படத் தேவையில்லை. காரணம் தமிழ்நாட்டின் இசை வின்றி அனுமதியைப் பெற முடியாது. தமிழ்நாட்டில் பிறந்த யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மேகேதாட்டுவுக்கு அனுமதியை தர மாட்டார்கள். எனவே அஞ்சத் தேவையில்லை.
உங்களுக்கு காங்கிரஸ் உடன் கூட்டணி இருக்கிறதே பேசக் கூடாதா என்கிறார்கள். பேசக் கூடாது என்பதே திட்டம். காரணம் பேசிப்பேசி அலுத்து போய் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த விவ காரத்தில் எதிர்க்கட்சிக்கு எவ் வளவு அக்கறை, ஆர்வம், வேகம் இருக்கிறதோ அதே வேகம், அதே அக்கறை, அதே உணர்வு எங்களுக்கும் உண்டு.” என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment