சென்னை, பிப். 22- பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து சாலை மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சில மாற் றுத்திறனாளிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு ராயப் பேட்டை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச் சர் கீதா ஜீவன் நேற்று (21.2.2024) நேரில் சந்தித்து நலம் விசாரித் தார். அதன் பின், மாற்றுத்திற னாளிகள் நல இயக்குநரகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் 9 அம்ச கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளுக்கு அரசு ஒப் புதல் அளித்துள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் அவர்க ளின் போராட்டத்தை கைவிட வேண்டும். –
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Thursday, February 22, 2024
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைக்கு ஒப்புதல் அமைச்சர் கீதா ஜீவன்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment