ஓர் அபாய அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

ஓர் அபாய அறிவிப்பு

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 16 லட்சம்

புதுடில்லி, பிப். 18- நம் நாட்டில், 2022ஆம் ஆண்டில் 14.1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் பாதிப்பு புதிதாக கண்ட றியப் பட்டதாகவும், 9.1 லட்சத்துக்கும் அதிகமா னோர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துஉள்ளது. பன்னாட்டு அளவில் புற்றுநோய் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற் காக, உலக சுகாதார நிறு வனத்தின் அய்.ஏ.ஆர்.சி., எனப்படும், புற்றுநோய் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள 115 நாடு களில் உள்ள புற்றுநோய் பாதிப்புகள், சிகிச்சை மற்றும் உயிரிழப்பு விகி தங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதன் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: உலகம் முழுதும் இரண்டு கோடி பேருக்கு புற்றுநோய் பாதிப்பு புதிதாக கண்டறி யப்பட்டுள்ளது.
இதில், 97 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரில் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்படு கிறார். ஆண்களில் 9 பேரில் ஒருவரும், பெண் களில் 12இல் பேரில் ஒரு வரும் நோய்க்கு உயிரிழக்கின்றனர்.

இந்தியாவில், ஒருவர் 75 வயதுக்குள் புற்று நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு 10.6 சதவீதமாக உள்ளது. நோய்க்கு உயிரிழக்கும் வாய்ப்பு 7.2 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில், 2022ல் 14.1 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. 9.1 லட்சம் பேர் உயிரி ழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
35,000 பேர் நம் நாட்டில், கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்க ளில், 16 சதவீதம் பேர் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது.

சமீபத்திய ஆய்வறிக் கையில், நம் நாட்டில் ஆண்டுதோறும் 80,000 பேர் கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படு வதாகவும், இவர்களில் 35,000 பேர் இறப்ப தாகவும் தெரிய வந்து உள்ளது.

No comments:

Post a Comment