கன்னியாகுமரி, பிப். 28- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திங்கள் நக ரில் 26.2.2024 அன்று நடைபெற் றது.
பகுத்தறிவாளர்கழக மாவட் டத் தலைவர் உசிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார் கழக மாவட்டத் தலைவர் மா,மு.சுப் பிரமணியம் முன்னிலை வகித்து உரையாற்றினார். தா. ஜெபராஜ் (இளைஞரணி ஒன்றிய அமைப் பாளர்) வரவேற்புரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் துவக்கவுரை யாற் றினார். திராவிடர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் சே. மெ.மதிவதனி சிறப்புரை யாற்றினார்.
தந்தை பெரியாருடைய தொண் டுகள், வைக்கம் போராட்ட வர லாறுகள், முத்தமிழ் அறிஞர் கலை ஞரின் சமூக நீதி தொண்டுகள் குறித்தும், ஒன்றிய பா.ஜ.க அரசு மக்களுக்கு செய்யும் துரோகங்க ளையும் தோலுரித்துப் பேசி மக்களை துன்புறுத்தி வரும் பாசிச பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண் டும் என எழுச்சிகரமாக சிறப்பு ரையாற்றினார்.
தக்கலை (தெ) ஒன்றிய திமுக செயலாளர் சுந்தர்சிங், மதன்குமார் த (தெ) ஒ. பொருளாளர், பிரிட்டோ சேம் (இ. மா.து. அமைப்பாளர்) திமுக அயலக அணி நிர்வாகி பாலூர் தேவா, கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா பொன்னுராசன், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், நாகர்கோவில் மாநகர தலைவர் சச. கருணாநிதி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார், மாவட்ட இளை ஞரணி செயலாளர் எஸ். அலெக் சாண்டர், பெரியார் வீரவிளை யாட்டுக் கழக பொறுப்பாளர் ஆ. சிவகுமார், மருத்துவர் கீழப்பாவூர் இரா.உ.மானவீரன், கோட்டாறு பகுதி கழக தலைவர் மணிமேகலை , செயலாளர் பொன்.எழில், பள் ளியாடி சி.இளங்கோ, குருந்தன் கோடு ஒன்றிய திக அமைப்பாளர் செல்லையன் கழகத் தோழர்கள் தி.ஞானவேல், தும்பவிளை மு. பால்மணி, சுதீந்திரம் அரிஸ், உடை யார்விளை இபின் சேம், திமுக நிர்வாகிகள் இரணியல் சுப்பிர மணியன், குளச்சல் அர்ஜூன், திக் கணங்கோடு மரியதாசன், காட் வின் தாசு, சியாமளா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர், பகுத்தறி வாளர்கழக மாவட்டச் செயலாளர் எம். பெரியார் தாஸ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment