மும்பை, பிப்.6- மனோஜ் ஜாரங் கேவின் தொடர் போராட்டத்தால் பணிந்த மகாராட்டிரா அரசு ஜனவரி மாத இறுதியில் மராத்தா இடஒதுக்கீடுக்கு ஒப் புதல் அளித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மராட்டிய மாநில பாஜக கூட் டணிக்குள் புகைச்சல் உருவாகியுள்ளது.
சமீபத்தில் ஊழல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தேசிய வாத காங்கிரஸை இரண்டாக உடைத்து, பாஜக கூட்டணி யில் இணைந்து துணை முதலமைச்சரான அஜித் பவாரின் முக்கிய வலது கரம் அமைச்சர் (மாநில உணவுத்துறை) சாகன் புஜ்பால் மராத்தா இடஒதுக்கீட்டிற்கான ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதமே தனது பதவியிலிருந்து விலகினார்.
ஆனால் பாஜக தலைவரும், துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னா விஸ் இதைப் பற்றி வெளியில் கூற வேண் டாம் என மிரட்டியுள்ளதாகவும், அதனால் பதவி விலகல் விவகாரத்தை பற்றி வெளி யில் கூறாமல் இருந்த நிலையில், ஞாயிறன்று தனது பதவி விலகல் விவ காரத்தை போட்டுடைத்துள்ளார் சாகன் புஜ்பால். இந்த விவகாரம் பாஜக கூட் டணிக்குள் சலசலப்பையும், அஜித் பவா ருக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment