புனித நகரமாக்குங்கோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

புனித நகரமாக்குங்கோ!

கும்பகோணத்தைப் புனித நகரமாக அறிவித்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்.
– ஆளுநர் இல. கணேசன்
கும்பகோணம் மட்டுமல்ல – அனைத்து நகரங்களையும் புனித நகரமாக அல்ல – சுகாதார நகரமாக ஆக்கட்டும்!
கும்பகோணத்தைப் புனித நகரமாக ஆக்க வேண்டுமாம். 12 ஆண்டுக்கு ஒரு முறை அவ்வூரில் மகா மகம் நடக்கும். அந்தக் கோவில் குளத்தில் குளித்தால் 12 ஆண்டுகள் செய்த பாவம் ஒரே முழுக்கில் பறந்து போயோ போய் விடுமாம்!
ஒரு சேதி தெரியுமா? கடந்த முறை மகாமகம் முடிந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர், அந்தத் தண்ணீரை சென்னை கிங் இன்ஷ்டிட்யூட்டுக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தார். என்ன முடிவு (ரிசல்ட்) தெரியுமா? 28 விழுக்காடு மலக்கழிவு; 40 விழுக்காடு மூத்திரக் கழிவு! புனித நகரமாக்குங்கோ!

No comments:

Post a Comment