திருச்சியில் 83 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார்
திருச்சி, பிப்.18 திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை இன்று (18.2.2024) காலை 10 மணியளவில் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில் தொடங்கியது. பயிற்சிப் பட்டறை தொடக்க விழா நிகழ்வுக்கு மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையேற்க, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு. மகாமணி வரவேற்புரையாற்றினார்.
பெல் ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மலர்மன்னன், மாவட்டம் மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ், பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் கா. அறிவுச்சுடர், மணப்பாறை ஒன்றிய தலைவர் பாலமுருகன், திருவரம்பூர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர், திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி அறிமுக உரையாற்றினார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர் தொடக்க உரையாற்றினார்.
கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையின் முக்கியத்துவத்தை விளக்கியும் கழக கட்டுப்பாடுகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். பின்னர் வகுப்புகள் தொடங்கியது. “தந்தை பெரியார் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில் ஆசிரியர் மா. அழகிரிசாமி வகுப்பு எடுத்தார். மாணவர்கள் ஆர்வமுடன் குறிப்பெடுத்தனர். “பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புகள்” என்ற தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வகுப்பபெடுத்தார். தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment