சென்னை,பிப்.6– தி.மு.க. துணை பொது செயலாளரான கனி மொழி எம்.பி., சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தூத்துக் குடிக்கு சென்றார். முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறி யதாவது:-
தி.மு.க. தேர்தல் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள், விவசாயிகள், தன்னார்வலர்கள், தொழில் துறை உள்பட அனை வரையும் சந்தித்து பிரச்சினைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறி உள்ளார்.
இதற்காக தேர்தல் அறிக்கை குழு தூத்துக்குடியில் பணியை தொடங்க உள்ளோம். அதன்பிறகு மற்ற மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.
தேர்தல் அறிக்கை குறித்து மக்க ளிடம் என்ன எதிர் பார்ப்புகள், கோரிக்கைகள் உள்ளது என்பதை கேட்டு அதன்படி தயாரிப்போம். ஒவ்வொருதேர்தல் அறிக்கையிலும் மாநில உரிமைக்கு முக்கியத்துவம் தரப்படும். அதேபோல் இந்தத் தேர்தல் அறிக்கையிலும் அளிக்கப் படும். -இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, February 6, 2024
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாநில உரிமைக்கு முக்கியத்துவம்: கனிமொழி பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment