சென்னை, பிப்.4- சென்னை குடிநீர் ஏரிகளில் 83.96 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,646 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 774 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 83.96 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 9.871 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 89.92 சதவீதமும், புழல் ஏரியில் 80.18 சதவீதமும், சோழவரம் ஏரியில் 71.6 சதவீதமும், கண்ணன்கோட்டை ஏரி யில் 98.6 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.
No comments:
Post a Comment