கன்னியாகுமரி – திருவள்ளுவர் சிலை அருகே
ராமன் கொடி – காவிக்கொடியா?
காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும்!
கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் (திருவள்ளுவர் சிலையருகே) ஏற்றப்பட்ட ராமன் கொடி குறித்து சமூக வலைத் தளங்களில் ஒளிப்படம் வெளியான நிலையில், எதிர்ப்புகள் வெடித்ததால் நேற்று முன்தினம் (6-2-2024) இரவோடு இரவாக கடலில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமன் கொடி அகற்றப்பட்டது. ஆனால், அந்த பகுதியில் மீண்டும் காவி கொடியேற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏதாவது பிரச்சினையை எழுப்பி, கலவரத்தை உண்டாக்கும் அராஜகப் புத்தியோடு சங் பரிவார்கள் திட்டமிட்டுச் செயல்படுவது அப்பட்டமாகவே தெரிகிறது.
காவல்துறை உடனடியாக காவிக் கொடியை அகற்றுவதுடன், அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவேண்டும். இதில் அலட்சியம் வேண்டாம்!
No comments:
Post a Comment