கடல் நீரை குடிநீர் ஆக்கும் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

கடல் நீரை குடிநீர் ஆக்கும் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம்

featured image

சென்னை நெம்மேலியில் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னை,பிப்.22- சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003ஆ-ம் ஆண்டு நெம் மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் நாள்தோறும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடி நீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன் பாட்டில் இருந்து வருகிறது.
இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-ஆவது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது. உவர்நீரை வெளியேற்றும் குழாயும் கடலில் பதிக்கப்பட்டன. இது மட்டு மின்றி சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கம் மற்றும் 48 கி.மீ. தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில் சோதனை ஓட்டமும் தொடங்கியது.
சோழிங்கநல்லூர், உள்ள கரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த பணிகள் அனைத்தும் இறுதிக் கட்டத் துக்கு வந்ததால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் நெம் மேலிக்கு 20.2.2024 அன்று நேரில் சென்று பார் வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-ஆவது ஆலையின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இதனால் வருகிற 24-ஆம் தேதி முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் இதை நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.
இதன்மூலம் தென்சென்னையில் பல்லாவரம் வரை 12 பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்களுக்கு கடல் குடிநீர் வினியோகிக்கப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கெனவே இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-ஆவது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட் டத்தை 2026-ல் முடிக்க பணிகள் விரைவுப்படுத்தப் பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சொல்லுவது தினமலர்!
இலவச பயணத் திட்டம் மாதம் ரூ.900 சேமிப்பு
சென்னை,பிப்.22- தமிழ்நாடு அரசின் இலவச பயண திட்டம் வாயிலாக, மாதம் 900 ரூபாய் வரை பெண்கள் சேமிப்பதாக, ‘சிட்டிசன் கன்சி யூமர் அண்டு சிவில் ஆக்ஷன் குரூப்’ என்ற, சி.ஏ.ஜி., அமைப்பு நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களின் நகர பேருந்துகளில், பெண்களுக்கான இலவச பயண திட்டம் குறித்து, சி.ஏ.ஜி., சார்பில் சென்னை, கோவை, சேலம், திருவாரூர், திருநெல்வேலி, திரு வண்ணாமலை என, ஆறு நகரங்களில், 3,000க்கும் மேற்பட்ட பெண்களிடம் சர்வே நடத்தப்பட்டது. சர்வே அறிக்கையை, சென்னை மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று (21.2.2024) வெளியிட்டார். அதில்,
* இலவச பயண திட்டத்தால், மூன்றில், இரண்டு பங்கு பெண்கள் மாதம், 400 ரூபாய்க்கு மேல்; 20 சதவீத பெண்கள் 600 முதல் – 800 ரூபாய் வரை சேமிப்பதாக தெரிவித்துள்ளனர்.
* 90 சதவீத பெண்கள் மாதம், 20,000 ரூபாய்க் கும் குறைவாகவே வருவாய் ஈட்டுவதை கருத்தில் கொண்டால், சேமித்த பணம் பயனுள்ளதாகவே இருக்கிறது. சேமிப்பு தொகையில் பெரிய அள வில் வீட்டு தேவைகளுக்கு செலவிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சி.ஏ.ஜி.,யின் செயல் இயக்குநர் சரோஜா, மூத்த ஆய்வாளர் சுமணா உட்பட பலர் பங்கேற்றனர்.
இலவச பயண திட்டத்தால், பெண்கள் மாதம், 900 ரூபாய் வரை சேமித்து வருகின்றனர். அரசு பேருந்துகளில் பெண் பயணியர் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த திட்டம் துவங்கியது முதல் இதுவரை, 424 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து கழகங் களுக்கு 6,788 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கி உள்ளது. மாநகர போக்குவரத்து கழகத் தில் மட்டும், 88.87 கோடி பேர் பயணித்துள்ளனர்; 422 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.-

 

No comments:

Post a Comment