தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க.

featured image

39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும்
‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்

சென்னை,பிப்.17- தமிழ் நாட் டில் முதன்முறையாக திமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் நாடாளு மன்ற தேர்தல் தேதி அறிவிக் கப்படாவிட்டாலும் பெரும் பாலான கட்சிகள் தேர்தல் பணி களில் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தி.மு.க. மட்டுமே கூட் டணிக் கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது.
அதோடு தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுவை பெறுவதற்கான தேதியையும் அறிவித்துள்ளது. மாநிலம் முழு வதும் பூத் கமிட்டி அமைக்கப் பட்டு, அவர்களுடன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி யாக பேசி முடித்துள்ளார்.
இந்நிலையில் மாநிலம் முழு வதும் 39 தொகுதிகளிலும் “உரி மைகளை மீட்க, ஸ்டாலினின் குரல் _ பாசிசம் வீழட்டும், இந் தியா வெல்லட்டும்’’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்த தி.மு.க. தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, நேற்று (16.2.2024) முதல்கட்டமாக 11 தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடை பெற்றன.
அதில் சிவகங்கையில் இ.பெரி யசாமி, நெல்லையில் கனிமொழி, விழுப்புரத்தில் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடியில் பொன்.முத்து ராமலிங்கம், கடலூரில் சா.சி.சிவ சங்கர், சிறீபெரும்புதூரில் மா.சுப்பிரமணியன், ஈரோட்டில் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, நாமக்கல்லில் தமிழச்சி தங்கபாண்டியன், கன்னியாகுமரி யில் திண்டுக்கல் அய்.லியோனி, மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன், சபாபதி மோகன், திருவண்ணாமலையில் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், ஒன்றிய அரசின் பாராமுகம், நிதி குறைப்பு, திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, மீனவர்கள் மீது தாக்குதலை தடுக்க இய லாமை, தமிழ்நாட்டை அவ மதிக்கும் ஆளுநர், முக்கிய திட் டங்களுக்கு அனுமதி மறுப்பு, குறிப்பாக மகளிருக்கு இலவசப் பயணம், பட்டதாரி மாணவிக ளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பால் விலை குறைப்பு உள்ளிட்ட ஏராளமான சாத னைகளை விளக்கிப் பேசவும் உத்தரவிடப்பட்டது.
முதல்முதலாக நேற்று நடந்த பொதுக் கூட்டத்தை தொடர்ந்து விரைவில் அடுத்த பொதுக்கூட்ட தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க.தான் முதல் முறையாக தேர்தல் பொதுக்கூட் டத்தை தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment