ராஞ்சி,பிப்.7- ஜார்க்கண்ட் சட் டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சம்பய் சோரன் அரசு வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோத பணப் பரிமாற்றம், நில மோசடி வழக்கில் கடந்த 31ஆம் தேதி கைது செய்யப் பட்டார்.
இதைத் தொடர்ந்து, ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சம்பய் சோரன் கடந்த 2ஆம் தேதி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.10 நாட்களுக்குள் சட்டப்பேரவை யில் பெரும்பான்மையை நிரூபிக்கு மாறு ஆளுநர் சி.பி.ராதா கிருஷ் ணன் கேட்டுக் கொண்டார்.
இதன்படி, சட்டப்பேரவையில் 5.2.2024 அன்று நம்பிக்கை வாக் கெடுப்பு நடந்தது. மொத்தம் உள்ள 80 எம்எல்ஏக்களில் பெரும் பான்மையை நிரூபிக்க 41 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசுக்கு ஆதரவாக 47 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதன்மூலம் முதலமைச்சர் சம்பய் சோரன், பெரும்பான் மையை நிரூபித்தார். பா.ஜ.க. கூட் டணியின் 29 சட்டமன்ற உறுப் பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
அமலாக்கத் துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன், நீதிமன்ற அனுமதியுடன் நம்பிக்கை வாக் கெடுப்பில் பங்கேற்றார். சட்டப் பேரவையில் முதலமைச்சர் சம்பய் சோரன் பேசும்போது, “ஹேமந்த் சோரனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொது மக்கள் நன்கு அறிந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் சார்பில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு உள்ளது. இந்த வழக்கு 5.2.2024 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வரும் 9ஆம் தேதிக் குள் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment