தருமபுரி, பிப்.19 அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; அவற்றை பெருமையின் அடையாளமாக மாற்றி வருவதாக அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் ‘பெற்றோரைக் கொண் டாடுவோம்’ என்கிற தலைப்பில் மண் டல மாநாடு 17.2.2024 அன்று நடை பெற்றது. மாநாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங் களைச் சேர்ந்த பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற் றனர். மாநாட்டில் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கண்காட்சி அரங்கு களைத் திறந்துவைத்து பேசியதாவது:
அறிவுசார் சமுதாயம் உருவாக்கும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர்களுக்கு உள்ளது. மாணவர்களின் மொழி உச்சரிப்பு பிழை இல்லாமல் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப மய்யத்தில் பயிற்சி பெற்ற 500 அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவியல் பெட்டகத்தை வழங்கியுள் ளார். இதன்மூலம் ஒரு லட்சம் மாணவர்கள் சிறப்பு அறிவியல் பயிற்சி பெற்றுள்ளனர். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தருமபுரி அரசு மாதிரி பள்ளியில் படித்த கிருஷ் ணகிரி மாவட்டம், பண்ணந்தூரைச் சேர்ந்த மாணவி தைவான் நாட்டில் உயர்கல்வி படித்து வருகிறார். தமிழ்நாடு அரசு 57 திட்டங்களை பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைவரிடத்திலும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. கரோனா தொற்றுக் காலத்தில் மாண வர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் களைவதற்குத் தொடங்கப்பட்ட ‘இல் லம் தேடிக் கல்வித் திட்டம்’ கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது. அரசு பள்ளிகள் வறுமை யின் அடையாளம் அல்ல. அவை பெருமையின் அடையாளம் என மாற்றி வருகிறோம். அரசுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த பொதுமக் களின் ஒத்துழைப்பு அவசியம். இதுவரை தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்த தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த கொடையாளர்கள் ரூ.782 கோடி வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்றேன் என்றார்.
No comments:
Post a Comment