காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
புதுடில்லி,பிப்.3- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேல் போல் கருநாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கருநாடக அரசு திறந்து விட வேண்டும் என உத்தர விடபட்டுள்ளது.
இந்த கூட்டத்தை பொறுத்த வரையில் கருநாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டுவது தொடர்பான விவாதம் நடத்த வலியுறுத்தியது. ஆனால் தமிழ் நாடு அரசை பொறுத்தவரையில், இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவ காரம் தொடர்பாக விவாதிக்க கூடாது.
ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் இருப்பதால் இது தொடர்பாக விவாதிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், கருநாடக அரசு சார் பில் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மேகதாது அணை என்பது எங்களது மாநிலத்தில் கட்டப்படுவது என்பது அவசிய மான ஒன்று. எனவே இந்த கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 மாநில அதிகாரி களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment