சண்டிகர், பிப். 4- பஞ்சாப் மாநில ஆளுநர் பன் வாரிலால் புரோஹித் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது சொந்த காரணங்களுக்கா கவும், வேறு சில கடமை களுக்காகவும் ஆளுநர் பதவியை விட்டு விலகு வதாக பன்வாரிலால் புரோஹித் பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்து உள்ளார். ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பன்வாரிலால் புரோகித் 2.2.2024 அன்று சந்தித்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் கடந்த 2021இல் பன்வாரிலால் நியமிக்கப்பட்டார். கிட் டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் ஆளுந ராக செயல்பட்டுவந்த நிலையில் தற்போது பத வியில் இருந்து விலகுவ தாக அறிவித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதுதொடர் பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழு தியுள்ள தனது கடிதத்தில் “தனது சொந்த காரணங் களுக்காகவும், வேறு சில கடமைகளுக்காகவும் பதவி விலகுவதாகவும், இதனை தயவு செய்து ஏற் றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அர சுக்கும் பன்வாரிலால் புரோஹித்துக்கும் மோதல் போக்கு நீட் டித்துவந்த நிலையில் பதவி விலகலை அவர் அறிவித்திருப்பது பஞ்சாப் அரசியலில் கவனம் பெற்றுள்ளது. நவம்பர் 10, 2023 அன்று, பஞ்சாப் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட அய்ந்து மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிப்பதில் தாமதம் ஏற்பட, விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றது. பன் வாரிலால் புரோஹித் துக்கு எதிரான வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையி லான நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர்அடங்கிய அமர்வு, “நீங்கள் நெருப்பு டன் விளையாடுகிறீர்கள்” என்றுகூறி எச்சரித்தது.
No comments:
Post a Comment