விழுப்புரம்,பிப்.8- தமிழ்நாட் டில் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வரு கிறது; அது சில நாள்களில் நிறைவடையும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ் ணன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் 6.2.2024 அன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள வைத் தேர்தல் ஆயத்த பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது,
மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணி அமைத் துப் போட்டியிட்டாலும் அவர் களின் முயற்சியை முறியடிப்பது என்ற அடிப்படையில், ‘இந்தியா’ கூட்டணி தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு தொகுதி யில்கூட பா.ஜ.க. வெற்றிபெற முடியாது.
மழை பாதிப்பு நிவாரணமாக தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு வழங்கப்பட வில்லை. தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட மக்க ளைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக் கவில்லை.
தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை
தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடை பெற்று வருகிறது.
அது சில நாள்களுக்குள் நிறை வடையும். கடந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோவை, மதுரை தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், தற்போதைய தேர்த லில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம்.
மாநில உரிமைகளைப் பறிக் கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, டில்லியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று (8.2.2024) போராட்டம் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்தில் அகில இந்திய தலைவர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்கள் பங்கேற்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டிலும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில், ஒன்றிய அரசைக் கண்டித்து, 45 இடங் களில் போராட்டங்கள் நடை பெறும்.
இந்தப் போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விசிக, மதிமுக, தவாக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிக ளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.
பேட்டியின்போது, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந் திரன், விழுப்புரம் மாவட்டச் செயலர் என்.சுப்பிரமணியன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் முத் துக்குமரன், பி.குமார், ராஜேந் திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment