டில்லியில் வரும் 8ஆம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்!
புதுடில்லி, பிப். 3- தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசின் இடைக் கால நிதிநிலை அறிக்கை யில் தமிழ் நாடு புறக்கணிக் கப்பட்டதை எதிர்த்தும், புயல் மழை நிவாரணம் வழங்காததைக் கண்டித் தும், தி.மு.கழக நாடாளு மன்ற உறுப்பினர்கள் டில்லி யில் ஆர்ப்பாட்டம் செய் வார்கள் என்று அறிவித் திருந்தார்.
அதன்படி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படிவரும் 8ஆம் தேதி தி.மு.க. நாடா ளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தவுள் ளனர் என்று தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தெரிவித்துள்ள னர்.
இது பற்றிய விவரம் வருமாறு:
ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்க ணிக்கப்பட்டிருப் பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்திருந் தார்.
தமிழ்நாடு புறக்க ணிப்பு குறித்து நாடாளு மன்றத்தில் திமுக நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள் என்றும் பட்ஜெட் குறித்த தமது அறிக்கை யில் முதலமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் டில் தமிழ்நாடு புறக்கணிக் கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புயல்மழை நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசைக் கண் டித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை எதிரே வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட் டத்தில் ஈடுபட உள்ள தாக அறிவிக்கப்பட்டுள் ளது.
No comments:
Post a Comment