19.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
♦ மோடி அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி. போராட்டம் தொடரும், விவசாய அமைப்புகள் முடிவு.
றீ பஞ்சாபில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லங்களை முற்றுகையிடுவோம் என சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை
♦ பா.ஜ.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை கிட்டாமல் இரட்டைத் தண்டனை தருவதுதான் மோடி சொல்லும் இரட்டை என்ஜின் ஆட்சி என ராகுல் தாக்கு.
♦2024 தேர்தலில் நாங்கள் 400 இடங்களை கைப்பற்றுவோம் என பா.ஜ.க. கூறுவது, தேர்தல் இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்கிறார் தொல்.திருமாவளவன்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்திட அம்மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் முடிவு.
♦ நாட்டின் மக்கள்தொகையில் 73 சதவீதம் பேர் ஓபிசி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினராக இருந்தாலும், ‘முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை’ என உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ தெலங்கானாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா
♦ 2024 மக்களவை தேர்தலில் தி.மு.க.வுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment