தேர்தல் நடத்தை அமலுக்கு வருவதற்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வெளியாகின்றனவாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

தேர்தல் நடத்தை அமலுக்கு வருவதற்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வெளியாகின்றனவாம்

புதுடில்லி,பிப்.28- பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறு பான்மையினர் மதத்தின் அடிப் படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி 2014-க்கு முன் இந்தி யாவுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடி யுரிமை திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசத்தில் சிறுபான்மையினராக இருந்து மதரீதியில் பிரச்சினை களை சந்தித்து இந்தியாவில் அகதிகளாக வாழும் இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய மதத்தினரை சேர்ந்த வர்களுக்கு இந்தியாவில் குடியு ரிமை கிடைக்கும். ஆனால், 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டு வரப் பட்டபோதும் சட்டம் இதுவரை அமல்படுத்தப் படவில்லை.

இதனிடையே, தலைநகர் டில்லியில் கடந்த 10ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஒன்றிய உள் துறை ஒன்றிய அமித்ஷா, ‘குடியுரிமை திருத்தச் சட்டம்’ 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. விதிகள் வெளியிடப்பட்டப்பின் குடியுரிமை திருத்தச்சட்டம் வரும் நாடா ளுமன்ற தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும். குடி யுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நமது இஸ்லாமிய சகோ தரர்கள் தவறாக வழி நடத்தப் பட்டு தூண்டப்பட் டுள்ளனர். பாகிஸ்தான், ஆப் கானிஸ்தான், வங்காளதேசத்தில் மதரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகி இந்தி யாவுக்கு வந்த மக்களுக்கு குடியுரிமை வழங் கவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமை யையும் பறிக்க அல்ல’ என்றார். இதனால், இந்தியாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் விரைவில் அமலாகும் என எதிர் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வரும் முன் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கான விதிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட ஒன்றிய அரசு திட்டமிட் டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

No comments:

Post a Comment