புதுப்பட்டினத்தில் தமிழர் திருநாள்-பொங்கல் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

புதுப்பட்டினத்தில் தமிழர் திருநாள்-பொங்கல் விழா

செங்கல்பட்டு, பிப். 18- ஸநாதனத்தை தகர்த்து சமத்து வத்தை நிலைநாட்டும் பொங்கல் விழா தமிழரின் திருவிழா என்ற முழக்கத் துடன் 17.1.2024 புதன் கிழமை காலை முதல் நடு இரவு வரை நடைப் பெற் றது. அம்பேத்கர் மக்கள் நற்பணி இயக்கத்தின் 37ஆம் ஆண்டு பொங்கல் விழா புதுப்பட்டினம் அம்பேத்கர் நகர், தாத்தா ரெட்டைமலை சீனிவா சன் திடலில் நடைபெற்றது.

காலை முதல் விளை யாட்டுப் போட்டிகளும் நடனம் மற்றும் திருக் குறள் ஒப்புவித்தல் பொங் கல் வைத்தல் பல்வேறு போட்டிகளும் நடை பெற்றன மாலை 7 மணி அளவில் அம்பேத்கர் மக்கள் நற்பணி இயக்கம் மற்றும் நண்பர்கள் விளையாட்டு குழுவும் திராவிடர் கழகம் மற்றும் அனைத்து கட்சி தலை வர்களும் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக் காக பாடுபட்ட தலை வர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , பொங்கல் விழாவின் சிறப்புகளை விளக்கி பொதுக்கூட்டம் மாலை நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு அம்பேத்கர் மக்கள் நற்பணி இயக்க தலைவர் நா. நீலமேகன் தலைமையேற்று ஒருங்கி ணைத்தார், செயலாளர் சிவா.வர்மன் வரவேற் புரை ஆற்றினார்,

திராவிடர் கழக மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தன பால் திமுக, ஒன்றிய குழு உறுப்பினர் மங்கை லட்சுமி, விசிக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.ரவி, ஆஷாபீவி காதர் உசேன் ஆகியோர் வாழ்த் துரைக்கு பின் திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா பெரியார் செல்வன் பொங்கலைப் பற்றியும் தந்தை பெரியா ரின் அண்ணல் அம்பேத் கரின் நட்பு பற்றியும் அவர்களின் சிந்தனை இந்த மக்களுக்கு எந்த வகையில் நன்மை பயத் தது என்கிற வகையில் சொற்பொழிவாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

திராவிடர் கழகத் தோழர்கள் பொதுக்குழு உறுப்பினர் சி. பக்தவச் சலம், மாவட்ட துணை தலைவர் நெல்லை சால மன், கல்பாக்கம் நகர தலைவர் மா. விஜயகுமார், நகர செயலாளர் விடு தலைசாமு, கோவிந்த சாமி மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் அம் பேத்கர் நகரின் மகளிர் சுய உதவி குழுவினர் ஊர் பொதுமக்கள் கட்சி சார் பற்ற அனைத்து கட்சியினரும் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு சிறப் பித்தனர். இறுதியாக பொருளாளர் சு.ரவி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment