மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு
புதுடில்லி,பிப்.6- நாடாளுமன் றத்தில் இப்போது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானம் மீது விவா தம் நடந்து வருகிறது.
அதில் பேசிய திருச்சி சிவா, “நாடாளுமன்றத்தில் குடியர சுத் தலைவரின் உரைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்.
பல்வேறு மாநிலங்களில் அவர் நியமித்த ஆளுநர்களைப் போல இல்லாமல், அரசின் உரையை எந்தவொரு மாற்ற மும் இல்லாமல் அப்படியே வாசித்ததற்கு நன்றி தெரிவித் துக் கொள்கிறேன்.
இந்த அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.. மதச்சார்பின்மைக்கு எதிரா னது. ஏழைகளுக்கு எதிரானது.. பெண்களுக்கு எதிரானது.. சிறு குறு தொழில் செய்வோருக்கு எதிரானது.. கார்ப்பரேட்க ளுக்கு ஆதரவானது. விவசாயிகளுக்கும் தொழிலாளர்களும் எதிரானது.
மாநிலங்களுக்கு எதிரா கவே இருக்கிறது. இதை எல் லாம் சொல்வதால் நான் ஒன்றிய அரசு மீது ஆதாரமற்ற தேவையில்லாத குற்றச்சாட்டு களைச் சுமத்துகிறேன் என்று பொருள் இல்லை.
அநீதி
இந்த அரசு மத்தியில் ஆட் சியை அமைத்த பிறகு, மாநிலக் கட்சிகளையும் உள்ளூர் பிரச் சினைகளையும் அழிக்க அப்பட் டமான முயற்சி நடக்கிறது.
மாற்றான் தாய் மனப் பான்மை உடன் தான் நடத்து கிறார்கள். நிதி பகிர்வை எடுத் துக் கொள்ளுங்கள். நிதி ஆணை யத்தின் பரிந்துரையைக் காட்டி லும் குறைந்த அளவே நிதியைத் தருகிறார்கள்.
முதலில் 34%ஆக இருந்து பிறகு 31.3%ஆக குறைத்தார்கள். இப்போது அது மேலும் குறைந்து 25%ஆக இருக்கிறது. மாநிலங்களுக்குத் தரப்படும் நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.
நேரடி வரி வசூலில் தமிழ் நாடு தான் இந்த நாட்டிற்கு அதிக பங்களிப்பைத் தருகிறது. நாங்கள் ஒன்றிய அரசுக்குத் தரும் ஒரு ரூபாய் வரியில் தமிழ் நாட்டிற்கு 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது.
அதேநேரம் உத்தரப் பிரதே சம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசா வழங்கப்படுகிறது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு.. எதற்காகத் தமிழ்நாட்டிற்கு இந்த அநீதி.
தமிழ்நாட்டுக்கு இழப்பு
அனைத்து மாநிலங்களும் ஒன்று எனச் சொல்கிறார்கள்.. பிறகு ஏன் இந்த ஏற்றத்தாழ்வு.. ஜிஎஸ்டி வரி முறையால் தமிழ் நாட்டுக்கு மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட் டுள்ளது.
அவசர அவசரமாக ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தியதே இதற்குக் காரணம். ஒரு மாநிலத் தில் இருக்கும் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்குத் தான் அம் மாநில மக்களுக்கு என்ன தேவை என்பது தெரியும்.
ஆனால், இப்போது ஆளு நர் மாளிகை தடையாக இருக் கிறது. சட்டசபையில் நிறை வேற்றப்படும் பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்படுவதில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகள் உள்ளே புகுந்து மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் தடுக்கிறார்கள். நிதி தருவதில்லை: சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. புயல் மற்றும் அதீத மழையால் சென்னை மற்றும் தென் மாநி லங்கள் கடுமையாகப் பாதிக் கப்பட்டன.
நாங்கள் இடைக்கால நிவா ரணமாக ரூ.5000 கோடி கேட் டோம். ஆனால் வெறும் ரூ. 450 கோடியை மட்டுமே தந்தார்கள். பிறகு விரிவான ஆய்வுக்குப் பிறகு வெள்ளத்தால் ஏற்பட்ட தேசங்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம்.
ஆனால், இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. பேரிடர் ஏற்படும் சமயங்களில் கூட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உதவிகள் கிடைப்பதில்லை.
கூட்டாட்சி முறையில் ஒன் றிய அரசில் இருப்பவர்கள் இப்படி நடந்துகொள்ளக் கூடாது.
இதன் காரணமாகவே நான் ஒன்றிய அரசு கூட்டாட்சி முறைக்கு எதிரானவர்கள் என்கி றோம். அண்டை மாநிலமான ஆந்திராவிலும் சிறப்பு அந்தஸ்து தராமல் இழுத்தடிக்கிறார்கள். மாநில அரசுகள் இப்படி நடத் துவது சரியான போக்கு இல்லை.
சிஏஏ
குடியுரிமை மசோதாவை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதில் முஸ்லிம்களை விடப்பட்டது ஏன்? இலங்கை விடப்பட்டது ஏன்? ஏற்கனவே இலங்கைத் தமிழர்கள் சுமார் 1.5 லட்சம் இந்தியாவில் இருக்கிறார்கள். இதுவரை அவர்களுக்குக் குடி யுரிமையை வழங்கவே இல்லை.
மேலும், முத்தலாக் சட்டத் தைக் கொண்டு வரும் இந்த அரசு கைம்பெண்கள் பாது காப்பு சட்டத்தைக் கொண்டு வர மறுக்கிறதே அதற்கு என்ன காரணம்.. மேலும், வேலைவாய்ப் பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது ஏன்?” என்று கேள்விகளை எழுப்பினார்.
No comments:
Post a Comment