கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 1, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.2.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சுமார் 6 மணி நேர விசாரணைக்குப் பின் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பதவியிலிருந்து விலகினார். ஹேமந்த் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச் சராக பதவியேற்கவுள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்கு வங்க எல்லையில் ராகுல் பயணம் செய்த கார் மீது கல் வீச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சண்டிகர் மேயர் தேர்தல் மோசடி; உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடுக்க உள்ளது.
* குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னதாக செங்கோல் ஊர்வலம் நடத்தி புதிய மன்னர்கால நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது மோடி அரசு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அமலாக்கத்துறை, சிபிஅய், அய்டி துறை போன்ற அமைப்புகள் இனி அரசு நிறுவனங்களாக இல்லை என்றும், தற்போது அவை பாஜகவின் ‘எதிர்க்கட்சியை ஒழிக்கும் அமைப்பாக’ மாறிவிட்டதாக வும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கண்டனம்.
தி இந்து:
* பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் நிரப்பப்படாத இடங்களை பொது இடங்களாக அறிவிக் கலாம் என்ற யு.ஜி.சி.யின் வரைவு அறிவுறுத்தலுக்கு எதிர்ப்பு கிளம்பியதும் பின் வாங்கிய யு.ஜி.சி., தற்போது எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இட ஒதுக்கீட்டினரை சமூக பொருளாதார பலனடையாத குழுக்கள் என பெயரை மாற்றி இட ஒதுக்கீடு கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* ‘ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்கள் வேண்டாம்.: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஜெய் ஜவான் என நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் தொடங்கி யுள்ளது.
* வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மணிப்பூர் மற்றும் இந்தியப் பகுதியை சட்டவிரோதமாக சீன ஆக்கிரமிப்பு போன்ற உண்மையான பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடாமல், மோடிக்கான விளம்பரமாக குடியரசுத் தலைவர் உரை இருந்தது என காங்கிரஸ் கண்டனம்.
* ஆட்சிக்கு வந்தவுடன் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு.
* தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலாக்கத்தை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment