அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கையெழுத்தியக்கத்தில் ஆசிரியர் கையெழுத்திட்டார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 1, 2024

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கையெழுத்தியக்கத்தில் ஆசிரியர் கையெழுத்திட்டார்!

featured image

சென்னை, பிப்.1- ஒன்றிய பிஜேபி அரசின் மாணவர் கல்வி விரோத போக்கை கண்டித்து, தேசிய கல்விக் கொள்கை 2020அய் ரத்து செய். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறிக்கின்ற தனியார் பயிற்சி மய்யங்களுக்கு கொள்ளை லாபம் ஈட்டித் தருகிற நீட் தேர்வை ரத்து செய். இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர் பேரவை தேர்தலை நடத்திடு. கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்று. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகைக் கல்வி நிலையங்களிலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பு. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கான (Cuet) நுழைவுத் தேர்வை ரத்து செய். இந்தியா முழுவதும் கல்வியில் தனியார்மய மற்றும் வர்த்தக நடவடிக்கையை தடுத்து நிறுத்து. நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்ற பெயரில் மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரம், வரலாறை சிதைக்காதே. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரை நியமிக்கும் முறையைக் கைவிடு. ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் மாநில மொழியைக் கட்டாய மாக்கு, ஹிந்தி மொழியைத் திணிக்காதே. பகத்சிங் தேசிய வேலை உறுதி அளிப்பு சட்டத்தை இயற்று ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத் திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நாடு முழுவதும் 5 கோடி கையெழுத்து இயக்கம் ஜனவரி 23 முதல் மார்ச் 23 வரை நடைபெறுகிறது.

இதில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் கையெழுத் திட்டார்கள்‌. அகில இந்திய பொதுச் செயலாளர் சீ.தினேஷ், மாநிலச் செயலாளர் பா.தினேஷ், மாநிலத் தலைவர் க.இப்ராகிம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ரஞ்சித், மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் ஆ.மணி கண்டன், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் வி.வித்யா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment