பிப்.8இல் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்புச் சட்டை அணிந்து தி.மு.க. உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் டி.ஆர்.பாலு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 4, 2024

பிப்.8இல் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்புச் சட்டை அணிந்து தி.மு.க. உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் டி.ஆர்.பாலு அறிவிப்பு

featured image

சென்னை, பிப். 4- தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசின் ஓரவஞ்சணையை கண் டித்து போராட்டம் அறிவித் துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு ஒன்றிய அரசு இன்னும் நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பிப்.8இல் நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. நாடாளு மன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட் டம் டி.ஆர்.பாலு அறிவித்துள் ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித் துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவுப்படி நாடாளு மன்ற வளாகத்தில் கருப்புச் சட்டை ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று அறிவித்துள்ளார்.
தவறிழைக்கும் ஆளுநர்களை குடியரசுத் தலைவர் தண்டிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி யுள்ளது.
ஒன்றிய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் தாக்கல் செய் துள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக வும், இதில் செயல்கள் குறைவாகவும், லட்சியங்கள் மிகப் பெரிதாகவும் உள்ளது.

தமிழ்நாட்டை புரட்டிப் போட்ட புயல் வெள்ளத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி தர வேண்டும் என்ற கோரிக்கை பற்றி நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.
புள்ளி விவரங்கள் என்று வரும்போது மிகச் சில புள்ளி விவரங்களையே அவர் கொடுத் திருக்கிறார். பொருளாதாரத் தின் குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண போதிய தெளிவோ, விருப்பமோ இல்லா மல் முற்றிலும் பொதுமையில் பேசப்படும் வகையில் நிதி அமைச்சரின் உரை இருந்தது. இது மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது
நாட்டின் எதிர்காலத்திற்காக சிறிய அளவில்கூட வாக்குறுதி கள் அளிக்கப்படவில்லை.
அவர்களைப் பொறுத்த வரை, முழு நிதிநிலை அறிக்கைக் காக காத்திருக்கிறார்கள்.
ஆனால், முழு நிதிநிலை அறிக்கையை நாங்கள் தாக்கல் செய்வோம்.

‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்று, மிகச் சிறந்த நிதிநிலை அறிக்கையை நாங்கள் வழங்கு வோம். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நாட்டுக்கு மிக முக்கியமானவை. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அதற்கு என்ன முக்கியத்துவம் இருந்தது? இதேபோல், பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தமிழ் நாட்டிற்கு எந்த நிதியும் வழங் காத ஒன்றிய அரசை கண்டித்து பிப்.8இல் நாடாளுமன்ற வளா கத்தில் திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment