புதுடில்லி, பிப்.11 டில்லியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் ரூ.777 கோடியில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 2022, ஜூன் 19ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதையில் நீர் கசிவு காரணமாக ஒரே ஆண்டில் சரி செய்ய முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ள தாகவும், இதற்காக கட்டுமான பணி மேற்கொண்ட தனியார் நிறுவனம் முன்பணமாக ரூ.500 கோடியை டெபாசிட் செய்து, உடனடியாக பழுதுபார்ப்பு பணிகளை தொடங்க வேண்டுமென டில்லி அரசின் பொதுப்பணித்துறை உத்தரவிட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம், அவதூறு கருத்துகளை பரப்புவதாக பொதுபணித்துறை இழப்பீடாக ரூ.500 கோடி வழங்க எதிர் தாக்கீது அனுப்பியது.
இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘ஊழல்வாதி களுக்குதான் நாட்டில் அமிர்த காலம் இருக்கிறது. ரூ.777 கோடியில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதை ஓராண்டில் பயன்படுத்த முடியாத நிலையில் மாறி உள்ளது. பிரதமர் மோடி ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் திட்ட மிடாமல் மாடலிங் செய்து வருகிறார். மேலும், அமலாக்கத் துறை, சிபிஅய், வருமானவரித்துறை ஆகியவை ஊழலுக்கு எதிராகப் போராடவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராகவே போராடுகின்றன’’ என கூறி உள்ளார்.
மயிலாப்பூர் கோவில் இடத்தில் பாஜக அலுவலகம்: அறநிலையத்துறை மூடி முத்திரை வைப்பு
சென்னை,பிப்.11- சென்னை மயிலாப்பூரில் பாஜக அலு வலகத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூடி முத்திரை வைத்தனர். மக்களவை தேர்தலையொட்டி பாஜக தென் சென்னை மாவட்டம் சார்பில் மயிலாப்பூர் சட்டப் பேரவை தொகுதியின் மக்களவை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தென் சென்னை மக்களவை பொறுப்பாளர் ராஜா தலைமையில், மயிலாப்பூர் தொகுதியின் மக்களவை தேர்தல் அலுவலகம் பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இந்நிலையில் வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் அரசியல் கட்சி அலுவ லகம் திறந்ததால் அதனை இந்து சமய அறநிலைத்துறை சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் மூடி முத்திரை வைத்தனர்.
1768 இளநிலை ஆசிரியர் பணிக்கு ஜூன் 23 தேர்வு
பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை,பிப்.11-தமிழ்நாட்டில் இடை நிலை ஆசிரியர் தேர்வு ஜூன் 23-இல் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
1,768 இடைநிலை ஆசிரியர் பணியிங்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் பிப்.,14 ம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரையில் இணைய வழியில் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வு தாள் 1-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு கட்டணமாக பொது மறறும் பிற பரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.ஏ. மற்றும் எஸ்.டி.பிரிவினர் தேர்வு கட்டணமாக ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும். தேர்வு கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டும செலுத்த வேண்டும. மேலும் தேர்வு குறித்த முழுமையான விவரங் களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுபான்மையினர் குறித்து பிஜேபி அண்ணாமலை அவதூறு பேச்சுசேலம் நீதிமன்றத்திற்கு 19ஆம் தேதி வரவேண்டும்
சென்னை,பிப்.11- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலை சிறுபான்மையினர் பற்றி அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அண்ணாமலை தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2022 அக்டோபர் மாதம் ‘பேசு தமிழா பேசு’ என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது,” என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலைப் பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நேரில் முன்னிலை யாக, அண்ணாமலைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கை முழுமையாக ரத்து செய்யக் கோரி, அண் ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். தமது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போதும் பொது அமைதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட வில்லை என்றும் மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங் கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து, அண்ணாமலையின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன்படி அண்ணாமலை 19.2.2024 அன்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
No comments:
Post a Comment