சென்னையில் 500 இடங்களில் இலவச வைஃபை வசதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

சென்னையில் 500 இடங்களில் இலவச வைஃபை வசதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

featured image

சென்னை, பிப். 24- சென்னை மாநக ராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவை கள் துறை சார்பில் இரண்டு நாட் கள் நடத்தப்படும் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு நேற்று (23.2.2024) தொடங் கியது. மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.
2021 -2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, யுமாஜின் (UMAGINE) – ஆண்டு வாரியான தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலா வது “UmagineTN” மாநாடு 2023 ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவி யல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம்  “UmagineTN 2024”  எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மய்யத்தில் நேற்றும், இன்றும் (24.2.2024) நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாளான நேற்று, பொருளாதார வளர்ச் சியை வழங்கவல்ல தொழில்நுட் பங்களை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு தளமாக, தொழில் நிறுவனங் களுடன் இணைந்து உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வைச் சென் னையில் நடத்த முடிவு செய்யப் பட்டது.

முன்னதாக, இந்நிகழ்வின் போது வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் வெளியிடப் பட்ட சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் உள் ளிட்ட அனைத்து மாநகராட்சிகளி லும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங் கப்படும் என்ற அறிவிப்பின்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment