சென்னை,பிப்.6- நமது நாட்டில் ஜனநாயகத்தை பேணி காப்பதில் நீதி மன்றங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை அதிகாரம் மிக்கவர்களின் செயல் பாடுகளுக்கு எதிராக ஒரு தனி மனிதனின் உரிமையை நிலைநாட்டு கின்றன. நீதிமன்றம் என்பது வெறும் 2 தரப்பினரின் பிரச்சினைகளை தீர்க்கும் இடம் மட்டும் அல்ல.
அது சமூகத்தில் நிலவும் அடக்கு முறைகளை தடுத்து நிறுத்தி, மக்களை பாதுகாத்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் இடமாகவும் உள்ளது. இந்தியாவில் வட்டம், மாவட்டம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என 4 வகையான நீதிமன்றங்கள் செயல் படுகின்றன. இவை ஒவ்வொன்றும், தங் களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகார வரம்பிற்குள் செயல்பட்டு, வழக்குகளை தீர்த்து வருகின்றன. தாலுகா நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்கு எதிராக மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என ஒவ்வொரு நிலைக்கும் நாம் செல்லலாம்
நீதிமன்றங்களில் தலைமை அமைப் பாக உச்ச நீதிமன்றம் உள்ளது. உச்ச நீதிமன்றம், டில்லியில் மட்டுமே உள் ளது. ஆனால் நாடு முழுவதும் வழக்கு களை கையாள 25 உயர்நீதிமன்றங்கள், 688 மாவட்ட நீதிமன்றங்கள், 5,650 தாலுகா நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
நீதிமன்றங்களில் உள்ள வழக்கு களை விரைவாக முடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வாய்ப்பு கேடாக கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உலகிலேயே, இந்தியாவில் தான் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. சீனா, பிரேசில் உள்பட பெரிய நாடு களைத் தவிர்த்து உலகில் உள்ள நாடுகளின் வழக்குகளையும் மொத் தமாக சேர்த்தால் கூட இந்தியாவில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை முந்த முடியாது. இந்தியாவில் வழக்குகள் அதிகமாக இருப்பதற்கு மக்கள் தொகை மட்டு மல்லாமல், நீதி கிடைப்பதற்கான தாமதமும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
No comments:
Post a Comment