சென்னை, பிப். 10- தமிழ்நாட்டில் உள்ள 4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மின்வணிகம் மூலம் விற்பனை செய்வதற்கு தமிழ் நாடு அரசின் ‘ஃபேம் டிஎன்’ நிறு வனம் மூலம் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக எம்எஸ்எம்இ துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ மேம்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலகம், வெளி நாடு வர்த்தக இயக்குநர் ஜெனரல் அலுவலகத்துடன் இணைந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின்வணிக (இ-காமர்ஸ்) நிறுவனங் கள் மூலம் எவ்வாறு ஏற்றுமதி மேற் கொள்ளலாம் என்பது குறித்து ஒருநாள் தேசிய கருத்தரங்கை சென்னையில் 7.2.2024 அன்று நடத்தியது.
இதில், தமிழ்நாடு அரசின் எம் எஸ்எம்இ துறை செயலாளர் அர்ச் சனா பட்நாயக் சிறப்பு விருந்தி னராக பங்கேற்று பேசியதாவது: இன்றைக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, மின்வணி கம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. மின்வணிகம் மூலம் பன்னாட்டு அளவில் மக் களின் வீடுகளுக்கே நேரடியாக பொருட்கள் கொண்டு சேர்க்கப் படுகின்றன.
அண்மைக் காலமாக, மின் வணிகம் மூலமான ஏற்றுமதி குறிப் பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் மின்வணிக ஏற்றுமதி நடப்பாண் டில் 99 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. பன்னாட்டு சந்தையில் இந் தியாவின் மின்னணு வர்த்தகம் 1.29 சதவீதமாக உள்ளது. சீனாவின் வர்த் தகம் 53.64 சதவீதமாக உள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தையில் மின்னணு வர்த்தகத் துக்கு ஏராளமான சந்தை வாய்ப்பு கள் உள்ளன. இதற்கு ஓஎன்டிசி போன்ற தளங்கள் உதவுகின்றன.
தமிழ்நாடு அரசின் ‘ஃபேம் டிஎன்’ நிறுவனம் இதுவரை, தமிழ் நாட்டில் உள்ள 4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங் களது தயாரிப்புகளை ஃபிளிப் கார்ட் நிறுவனம் மூலம் விற்பனை செய்வதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன்மூலம், ரூ.11.5 கோடி மதிப்பிலான பொருட் கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
பயிலரங்கில் பேசிய வெளி நாட்டு வர்த்தக இயக்குநர் ஜென ரல் அலுவலகத்தின் மண்டல கூடுதல் இயக்குநர் ராஜலஷ்மி தேவராஜ், `‘மின்னணு வர்த்தகம் மூலம் ஏற்றுமதி செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழாக் காலங்கள் மற்றும் பருவ காலங்களுக்கு ஏற்ற வகையிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். அதேபோல், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தரத் துடன் இருப்பது மட்டுமின்றி அவற்றை சிறந்த முறையில் பேக் கேஜிங் செய்ய வேண்டும். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மின்னணு வர்த்தகம் மூலம் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இப்பயிலரங்கில், எம்.எஸ். எம்.இ. மேம்பாட்டு ஒருங்கி ணைப்பு அலுவலகத்தின் இணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி, உதவி இயக்குநர் சி.பி.ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment