ஈரோடு, பிப்.6- கொங்குமண்டல வளர்ச்சிக்காக பா.ஜனதாவினர் என்ன செய்தார்கள்? என்று கொங்கு எழுச்சி மாநாட்டில்
ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
கொங்கு எழுச்சி மாநாடு
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் 4.2.2024 அன்று நடந்தது.
மாநாட்டுக்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வ ரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:
விமர்சனம்
நமது கட்சியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் சிறந்த திட்டங்களை நிறைவேற்ற பல சட்டமன்ற உறுப் பினர்கள் வேண்டும். நம்மை விமர்சனம் மட்டும் செய்கிறார்கள்.
ஆனால் பா.ஜனதாவில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந் தும் கொங்கு மண்டல வளர்ச்சிக் காக என்ன செய்தார்கள்?.
குறை சொல்லியே பெயர் வாங்கிய புலவர் பற்றி கூறுவது உண்டு. தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் அது போன்று தற்போது பேசி வரு கிறார்.
-இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
அமைச்சர்கள் பங்கேற்பு
மாநாட்டில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்து சாமி, ‘நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கொங்கு மண்டல எழுச்சி மாநாடு ஏற்படுத்தி கொடுக்கும்’ என்று கூறினார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும் போது, கொங்கு மண்டலத்திலிருந்து ரூ.40ஆயிரம் கோடி ஏற்றுமதி வருவாய் கிடைக்கிறது என்று கூறினார்.
வள்ளி கும்மியாட்டம்
இந்நிலையில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மாநாட்டில் 16 ஆயிரம்பெண்கள் பங்குபெற்ற வள்ளி கும்மியாட்டம் இடம்பெற்றது.
எய்ம்ஸ் மருத்துவமனை
பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொங்கு மண் டல எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் வாழ்த்து
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு சிறப்பாக நடை பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த வாழ்த்துக் கடிதத்தை மாநாட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் பேசும்போது வாசித் தார்.
No comments:
Post a Comment