மார்ச் 3-இல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

மார்ச் 3-இல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்

featured image

கரூர், பிப்.22- – கரூர் மாவட்டத்தில் 74,954 குழந்தைகளுக்கு தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள் ளது என மாவட்ட ஆட் சியர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நாடு தழுவிய தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் 3.3.2024 அன்று நடைபெறுவது தொடர் பாக மாவட்ட அளவி லான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற் றது.
கரூர் மாவட்ட சுகா தாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.சந்தோஷ் குமார் இத்திட்டம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறு கையில், “இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, கரூர் மாவட்டத்தில் 831 மய்யங்களில் (கூடுதல் மய்யங்கள் உட்பட) சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.
அதில், கிராமப் பகுதி யில் 726, நகராட்சிப் பகுதியில் 105 சொட்டு மருந்து மய்யங்கள் நிறு வப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
முகாமில் 5 வயதிற் குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும், இதற்கு முன் எத்தனை தடவை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை இச் சொட்டு மருந்து கூடுதல் தவணையாகக் கொடுக் கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுடன் இடம் பெயர்வோர், வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமானப் பணிகள் மற்றும் இதரப் பணி களுக்காக தற்காலிகமாக குடிவந்தோர் தங்கியுள்ள பகுதிகளில் இருக்கும் குழந்தைகளில், ஒரு குழந் தைகூட விடுபடாமல் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அனைத்துக் குழந்தை களுக்கும் சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட் டுள்ளது.
முகாமினை சிறந்த முறையில் செயல்படுத் தும் பொருட்டு பல்வேறு அரசுத்துறை மற்றும் தன் னார்வ அமைப்புகளை சேர்ந்த பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப் பினர்கள் மற்றும் ஊட் டச்சத்து பணி யாளர்கள் சுமார் 3417 பேர் இப்பணி யில் பங்கேற்க உள்ள னர்.
முகாம் பணிகளை கண் காணிப்பதற்காக சுமார் 106 மேற்பார்வை யாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். வெளியூர் பயணம் செய்யும் மக்க ளும் பயன்பெற வசதி யாக, பேருந்து நிலையங் கள், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் 3.3.2024 முதல் 3 தினங்களுக்கு, இடை விடாமல் 24 மணிநேரமும் செயல்படும். இந்த ஜிக்ஷீணீஸீsவீt ஙிஷீஷீtலீ யீ&பி கரூர் மாநக ராட்சி யில் 3 இடங்களிலும் குளித்தலை நகராட்சியில் ஒரு இடத்திலும் செயல் படும். கரூர் மாவட்டத்தில் 24 ஆண்டுகளாக (1999-க்கு பிறகு) போலியோ நோயி னால் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்படவில்லை” என்றார்.

No comments:

Post a Comment