தஞ்சை, பிப். 28- தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் அறுவடை பணிகள் தீவிரமடைந்து உள்ளன. இதுவரை 513 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் தற் போது வரை 1,18,623 எக்டர் பரப் பில் நெல் சாகுபடி மேற்கொள் ளப்பட்டு 60 சதவீதம் பரப்பில் அறுவடை பணிகள் நிறைவடைந் துள்ளன. தற்போது அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்மூலம் சன்ன ரகம் ஒரு கிலோ ரூ.23.10க்கும், மோட்டா ரகம் ரூ.22.65க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது வரை 513 நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் மூலம் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
விற்பனை செய்யப்படும் நெல்லுக்கு உண்டான தொகை உடனடியாக விவசாயிகளுக்கு ரூ.2 கோடி மின்னணு வங்கிப்பண பரி வர்த்தனை மூலமாக வழங்கப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது நெல் அறுவடை முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் பாராட்டு தெரி விக்கின்றனர். நெல் தேக்கமடையாமல் தினமும் குறைந்தபட்சம் ஆயிரம் மெ.டன். ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக அதிகாரி கள்தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டை காட்டிலும் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் களின் கருத்துக்களை கேட்டறிந்த தன் அடிப்படையில் பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு வாட கையாக ரூ.2,500/-, டயர் டைப்க்கு ரூ.1,750/- வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நிர்ணயம் செய்யப்பட்ட இந்த வாடகைத் தொகைக்கும் மிகாமல் விவசாயிகளிட மிருந்து வசூல் செய்து கொண்டு அறுவடை இயந்திர உரிமையாளர்கள் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். நடப்பு கோடை பருவத்தில் 1200 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1,14,601 எக் டேர் சம்பா பயிர் காப்பீடு செய்யப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment