புதுடில்லி, பிப். 20- வரும் 24ஆம் தேதி அன்று ராகுல் காந் தியின் நியாய நடைப் பயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளர்.
இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற மக்க ளவை தேர்தல் நடை பெறக் கூடும் என எதிர் பார்க்கப்படும் சூழலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியாய யாத்திரை என்ற பெயரில் நடைப்பயணம் மேற் கொண்டு வருகிறார். ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 15 மாநிலங்களை உள்ள டக்கிய 6,700 கி.மீ. தொலைவை நடைப்பய ணம் வழியே கடந்து செல்ல திட்டமிட்டு உள்ளார்.
ராகுலின் நடைப்பய ணத்தில், அவருடைய சகோதரி மற்றும் காங்கி ரஸ் பொதுச் செயலாள ரான பிரியங்கா காந்தி கடந்த 16-ஆம்தேதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருடைய உடல்நலம் பாதித்த நிலையில், அவ ரால் அதில் பங்கேற்க முடியவில்லை. பிரியங்கா டில்லியில் உள்ள சர் கங் காராம் மருத்துவமனை யில் நீரிழப்பு மற்றும் வயிற்று வலி சிகிச்சை பெற்று வீடு திரும் பினார்.
எனவே, ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற் றுமை நீதி பயணத்தில் வருகிற 24-ஆம்தேதி அன்று உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில், பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார் எனத் தெரிய வந்துள்ளது.
Tuesday, February 20, 2024
வரும் 24 ஆம் தேதி நியாய நடைப்பயணம் பிரியங்கா காந்தி பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment