கடந்த ஒரே ஆண்டில் மட்டும் பி.ஜே.பி.க்கு நன்கொடை ரூபாய் 2361 கோடியாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 11, 2024

கடந்த ஒரே ஆண்டில் மட்டும் பி.ஜே.பி.க்கு நன்கொடை ரூபாய் 2361 கோடியாம்

featured image

புதுடில்லி, பிப்.11 கடந்த ஒரே ஆண்டில் பா.ஜ. கட்சி நன்கொடை உள்ளிட்டவை மூலம் ரூ.2,361 கோடி வருவாய் ஈட்டியிருப்ப தாகவும், இது காங்கிரசின் வரு வாயை விட 5 மடங்கு அதிகம் எனவும் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதாகக் கூறி, ஒன்றிய பா.ஜ. அரசு கடந்த 2018இல் தேர்தல் நிதி பத்திரங்களை அறிமுகப்படுத்தியது. வங்கி மூலம் இந்த பத்திரங்களை தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கி, அவர்கள் விரும்பும் கட்சிகளுக்கு நன்கொடையாக தரலாம். இதில், யார், எந்த நிறுவனம் நன்கொடை வழங்கியது என்ற விவரங்களை யாரும் வெளியிடத் தேவையில்லை. அவை ரகசியமாக வைத்திருக்கப்படும்.

இதற்கு முன் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் நிதி தருபவர்கள் அவர்களின் பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டியிருந்தது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு அதன் மூலம் பா.ஜ. கட்சி மட்டுமே அதிகளவு நிதி பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தேர்தல் பத்திரங் களின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி வரு கின்றன.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண் டும் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் வருவாய் தொடர்பாக தணிக்கை செய்யப்பட்ட வரவு _ செலவு கணக் குகளை தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகளும் சமர்பிக்க வேண்டும். அதன்படி கட்சிகள் சமர்பித்த வரவு_ செலவு கணக்குகள் அடிப்படையில் கடந்த நிதியாண் டில் எவ்வளவு நிதி கிடைத்தது என்பது தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையம் மூலம் வெளியாகி உள்ளது. அதில், கடந்த 2022-_2023ஆம் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத் தம் ரூ.2,120 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது.

இதில் 61 சதவீதம் பா.ஜ. கட் சிக்கே கிடைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அக்கட்சி ரூ.1,294 கோடி பெற்றுள்ளது. இதர பல்வேறு வழிகள் மூலம் ஓராண்டில் கட்சிக்கு கிடைத்துள்ள மொத்த வருவாய் ரூ.2,360.8 கோடி. இது முந்தைய 2021_20-22ஆம் ஆண்டில் பெற்ற ரூ.1,917 கோடியை விட அதிகம். வங்கியில் பா.ஜ. கட்சி வைத்திருந்த பணத்திற்கான ஓராண்டு வட்டி மட்டுமே ரூ.237 கோடி கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டு ரூ.135 கோடியாக இருந்தது. பா.ஜ.வைத் தவிர வேறெந்த கட்சியும் தேர்தல் பத்திரம் மூலம் பெரிய அளவில் நன்கொடை பெறவில்லை. பா.ஜ. வுக்கு கிடைத்த வங்கி வட்டித் தொகையை கூட எதிர்க்கட்சிகள் நெருங்கவில்லை. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரசுக்கு கடந்த ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நன்கொடை ரூ.171 கோடி. இது பாஜவை விட 7 மடங்கு குறைவு. மேலும், இக்கட்சி முந்தைய ஆண்டு பெற்ற ரூ.236 கோடியை விட குறைவு. காங்கிரஸ் கட்சி 2022-_2023ல் பெற்ற மொத்த வருவாய் ரூ.452.37 கோடி. இது பா.ஜ. பெற்ற மொத்த வருவாயை விட 5 மடங்கு குறைவு. உபியைச் சேர்ந்த மாநில கட்சியான சமாஜ்வாடி 2022_20-23ல் தேர்தல் பத்திரம் மூலம் ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறவில்லை. முந் தைய ஆண்டில் இக்கட்சி ரூ.3.2 கோடி மட்டுமே பெற்றுள்ளது. ஆந்திராவின் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் 2022-_2023இல் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.34 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 10 மடங்கு அதிகம்.

No comments:

Post a Comment