தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மாவட்ட தலைவர் மு.முனியசாமி, காப்பாளர் மா.பால் ராசேந்திரம், மாவட்ட செயலாளர் முருகன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
குலசேகரபட்டினம் வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காவல் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் மு.முனியசாமி தலைமையில் மாவட்ட காப்பாளர் மா.பால் ராசேந்திரம், மாவட்ட செயலாளர் முருகன், குலசை செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் எழுச்சி மிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க., ம.தி.மு.க, வி.சி.க., ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்றனர்.
தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் மரு.வெற்றிவேல், தி.மு.க. உடன்குடி ஒன்றிய செயலாளர் இளங்கோ, வி.சி.க. மாநிலக்குழு உறுப்பினர் தமிழினியன், வி.சி.க. உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்நேயன், ம.ம.க. மாவட்ட தலைவர் அஸ்மத், சி.பி.எம். உடன்குடி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, கன்னியாகுமரி மாவட்ட கழக தலைவர் ம.மு. சுப்பிரமணியம், குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், நெல்லை மாவட்ட தலைவர் இராஜேந்திரன், நெல்லை மாவட்ட காப்பாளர் இரா.காசி, வள்ளியூர் குணசீலன், வள்ளியூர் நகர கழக செயலாளர் நம்பிராஜன், ப.க.துணை செயலாளர் மோகன சுந்தரம், தென்காசி மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன், தென்காசி மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் அமுதன், குற்றாலம் சண்முகம் உள்பட பலர் வரவேற்றனர்.
நீதிக்கட்சி முன்னோடி சி.டி. நாயகம் அவர்களால் துவக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் பள்ளி செயலாளர், சி.டி.நாயகம் அவர்களின் பேரன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்
தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்தும், கையொலி எழுப்பியும்உற்சாகமாக வரவேற்றனர். சி.டி.நாயகம் போல் வேடம் அணிந்த மாணவனை தமிழர் தலைவர் பாராட்டினார்.
அருப்புக்கோட்டை பகுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் நல்லதம்பி, மாவட்ட செயலாளர் அருப்புக்கோட்டை ஆதவன் மற்றும் பல்வேறு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
No comments:
Post a Comment