காணொலி வழியாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, பிப். 28- அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கத்தில் இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்ட பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கோழியாளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் இரட்டை மலை சீனிவாசன். இவர், பட்டிய லின மக்களின் பல்வேறு உரிமை களுக்காக போராட்டங்களில் ஈடு பட்டவர்.
இந்நிலையில், இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், கடந்த 2018-19-ம் ஆண்டு ரூ.1 கோடியே 35 லட்சத்து 74 ஆயிரத்து 909 கோடி மதிப்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதையடுத்து, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, வருவாய்த் துறை மூலம் 1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட் டது. மேலும் ரூ.82 லட்சத்தில் சுற்று சுவர் உள்ளிட்ட இதர பணி கள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப் பட்டது.
இந்நிலையில் இரட்டைமலை சீனிவாசனின் முழு உருவ சிலை யுடன் கூடிய நினைவு மண்டபம் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் 4,300 சதுர அடியில் கட்டி முடிக்கப் பட்டது. இந்நிலையில் முழு உருவ வெங்கல சிலையுடன் கூடிய இந்த நினைவு மண்டபம் திறப்பு விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டா லின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்.பி. செல்வம் செய்யூர் எம்எல்ஏ பனை யூர் பாபு, கூடுதல் ஆட்சியர் அனா மிகா ரமேஷ் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment