கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.201.67 கோடி தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.201.67 கோடி தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

featured image

சென்னை, பிப்.25 தென் மாவட் டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங் கிட அரசாணை வெளியிடப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழை யளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது.
இதையடுத்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்பு களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி பார்வையிட்டு, வெள்ள பாதிப் பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப் பிற்குள்ளான பயிர்களுக்கான நிவா ரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார். அதன் அடிப்படையில், தென் மாவட்டங் களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென் காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1,64,866 எக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.160.42 கோடி நிவாரணம் வழங்கிடவும், 38,840 எக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 41.24 கோடி நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது” இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளது.

No comments:

Post a Comment