தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்.19இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 3, 2024

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்.19இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

சென்னை, பிப்.3—தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் முனை வர் கி.சீனிவாசன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யின் கூட்டம் 12.2.2024 அன்று, காலை 10.00 மணிக்கு, சென்னை – 600 009, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்.
2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 19.2.2024 அன்று காலை 10.00 மணிக்கு பேர வைக்கு அளிக்கப்படும்.
மேலும், 2024-2025-ஆம் ஆண் டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024-ஆம் ஆண்டு 20.2.2024 செவ்வாய்க்கிழமை அன் றும், 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024-ஆம் ஆண்டு, புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்.
-இவ்வாறு அவர் அதில் குறிப் பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment