லக்னோ, பிப்.22- உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி_- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. மாநிலத்தில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக இரு கட்சிகளும் கூட்டாக அறிவித்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பல் வேறு கட்சிகள் இணைந்து “இந்தியா” என்ற பெயரில் கூட் டணி அமைத்து உள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த் தையும் நடந்து வருகின்றன.
இதில் பல மாநிலங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டதால் சில கட்சிகள் தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. குறிப்பாகமேற்கு வங்காளத் தில் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளன.
இதற்கிடையே 80 தொகுதி களை கொண்ட உத்தரப்பிர தேசத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற் றும் சமாஜ்வாடி இடையே வார்த்தை நடந்து வந்தது.
அதாவது காங்கிரசுக்கு வெறும் 11 தொகுதிகள் மட் டுமே தருவதற்கு சமாஜ்வாடி முதலில் முன்வந்தது. ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் 20க்கு மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென வலியு றுத்தியது.
இதனால் பேச்சு வார்த்தை யில் முட்டுக்கட்டை நீடித்தது.
அதேநேரம் உத்தரப்பிர தேசத்தில் ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணத்தில் பங்கேற்கு மாறு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
ஆனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்தால் தான் பங்கேற்கமுடியும் என சமாஜ்வாடி அறிவித்தது. அத் துடன் கடைசி வாய்ப்பாக 17 தொகுதிகள் வழங்குவதாகவும் காங்கிரசிடம் தெரிவித்தது.
நேற்று (21.2.2024) மொரா தாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷிடம் உத் தரப்பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி அமை யுமா? என கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர், “ஆம். உத்தரப்பிரதேசத்தில் காங் கிரஸ்- சமாஜ்வாடி கூட்டணி அமையும். இதுகுறித்து விரை வில் அறிவிக்கப்படும்” என்றார்.
இந்தநிலையில் சமாஜ்வாடி வழங்க முன்வந்த 17 தொகுதி களை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது இதன் மூலம் மாநிலத்தில் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
தொகுதிப்பங்கீடு உறுதி செய்யப்பட்டதை, இரு கட்சி களின் நிர்வாகிகளும் நேற்று (21.2.2024) கூட்டாக அறிவித்தனர்
குறிப்பாக சமாஜ்வாடியின் மாநில தலைவர் நரேஷ்உத்தம் படேல், தேசிய பொதுச் செய லாளர் ராஜேந்திர சவுத்ரி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவி னாஷ் பாண்டேகூறுகையில் ‘உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாடியும். பிற கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன’ என தெரிவித்தார்.
இதன் மூலம் “இந்தியா” கூட்டணியில் தொகுதிப்பங்கீடு சுமுகமாக முடித்த முதல் மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலை மையில் ஓர் அணியும் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ஓர் அணியாகவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஓர் அணியாகவும் களம் கண்டன.
இந்த மும்முனை போட்டியில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 64 இடங்களையும், மெகா கூட்டணி 15 இடங்களை யும், காங்கிரஸ் ரேபரலி தொகு தியை மட்டும் கைப்பற்றியது அந்த தொகுதியில் போட்டியிட்ட சோனியாகாந்தி வெற்றி பெற்றார்.
அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, ஒன்றிய அமைச்சர் சுமிரிதி இரானியிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார். அதேநேரம்.அவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசத்திலும் கூட்டணி
இதைப்போல மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் _- சமாஜ்வாடி கூட்டணி பங்கீடு முடிவடைந்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 29 இடங்களில் கஜூரகோ தொகுதியில் சமாஜ் வாடி போட்டியிடுவதாகவும், மீதமுள்ள தொகுதிகளில் காங் கிரசுக்கு ஆதரவளிப்பதாகவும் மாநில சமாஜ்வாடி தலைவர் நரேஷ் உத்தம் படேல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment