தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,622 ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் ஒன்றிய அரசு வழங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,622 ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் ஒன்றிய அரசு வழங்கியது

featured image

சென்னை, பிப்.17- தமிழ்நாட்டிலுள்ள 1,622 ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆய்வகங்களுக்கு தேசிய தரநிர்ணய சான்றிதழை ஒன்றிய அரசு வழங்கியுள் ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 1,622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்க ளுக்கு ஒன்றிய அரசின் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் அந்த சான்றிதழ்களை ஆய்வ கங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (16.2.2024) வழங் கினார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், தேசிய தர நிர் ணய அங்கீகார வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.அரவிந்த் ரமேஷ் உள் ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தாவது:
தமிழ்நாட்டில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள் ளன. சென்னை தவிர்த்து, 2,127 ஆரம்ப சுகா தார நிலையங்கள் மற்றும் நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன் றிய அரசின் தேசிய தரநிர்ணய அங்கீகார சான்றிதழ் 1,622 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வ கங்களுக்கு கிடைத்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும்.
“மக்களைத் தேடி மருத்துவம்” திட் டம் எப்படி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறதோ, அதேபோன்று இந்த ஆய்வக வசதியும் மக்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்கின்ற வகையில் கடந்த 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட் டம் தொல்லவிளை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி ஆய்வகம் என்கின்ற திட்டம் தொடங் கப்பட்டது. அந்த திட்டத்தின்படி 34 வகை ஆய்வக பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டில் வீடுகள் தேடிச் சென்று ஆய்வக வசதி கள் என்கின்ற வகையில் 63 வகையான ஆய் வக வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் பாராட்டி ஒன்றிய அரசு, தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழை கொடுத்துள்ளது.
சமீபத்தில், 1,021 புதிய மருத்துவர் களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. அதேபோல், 977 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வு நடத்தப் பட்டு பணி ஆணைகள் தரப்பட் டுள்ளன. 332 ஆய்வக நுட்புநர்களுக்கு அடுத்த வாரம் பணி ஆணைகள் வழங்கப்பட வுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment