பெரம்பலூர், பிப். 25- பெரம்பலூரில் தேவநேயப் பாவாணர் 122 ஆவது பிறந்தநாள், சாவித்திரி பாய் பூலே பிறந்தநாள் மற்றும் பன்னாட்டுத் தாய்மொழி நாள் விளக்க கூட்டமானது தமிழ் வழிக் கல்வி இயக்கம் பொதுச் செயலாளர் தேனரசன் தலைமை யில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தியார் சிலை முன்பு
24.2.2024 அன்று இரவு சுமார் 8:30 மணியளவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ் மொழியை கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், வேலை மொழியாகவும், நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும், ஆலயங்களில் சமஸ்கிருதத்தில் அல் லாமல் தமிழில் மந்திரங்களை உசரித்திடவும், மாவட்டம் தோறும் தமிழ் வழியில் சித்த மருத்துவக் கல்லூரிகள் அமைத் திட வேண்டும் எனவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 100% வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வைக் கப்பட்டன.
தேவாரம், திருவாசகம், எதுகை மோனை, திருவருட்பா போன்ற பாடல்கள் மூலம் இசைக் கலைஞர்கள் தமிழ் புகழ் பாடினர்.
இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, தமிழ்வழிக் கல்வி இயக்கம் மாநில துணைத்தலைவர் செந் தமிழ்வேந்தன், செயலாளர் முத் துசாமி ஆகியோர்கள் முன் னிலை வகித்தனர்.
தமிழ்குமரன், சின்னப்பத் தமிழர் ஆகியோர் வரவேற்புரை மற்றும் நோக்கவுரையாற்றினர்.
மேலும் தமிழ்நாடு பொது வுடமைக் கட்சி செயலாளர் செல்வமணியன், பேராசிரியர் செல்வக்குமார், தமிழாசிரியர் சிலம்பரசன், வேளாண் பொறி யாளர் காசிமணி, தமிழ்ச்சங்கம் செயலாளர் வழக்குரைஞர் சீனி வாசராவ், வழக்குரைஞர் அண் ணாதுரை, மக்கள் அதிகாரம் காவிரி நாடான், மற்றும் திரா விடர் கழக நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள்.
No comments:
Post a Comment