சென்னை. ஜன. 20- மக்க ளவை தேர்தலை முன் னிட்டு, தமிழ்நாடு காங்கி ரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் 31 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள் ளது.
மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பணிகளை அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, அந்தந்த மாநில அளவில் மாநில தலைவர்கள் தலைமை யில் தேர்தல் குழுக்களை அமைத்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட் டில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலை மையில் 31 பேர் கொண்ட தேர்தல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் நிய மித்துள்ளது.
அந்த குழுவில் சட் டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை, மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், மணிசங்கர் அய்யர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஏ.செல்லக் குமார், மாணிக்கம் தாகூர், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன், சு.திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, கே.கோபிநாத், கே.ஜெயக் குமார், எம்.கே.விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், ஜே.எம்.ஆருண், பீட்டர் அல்போன்ஸ், நாசே ஜெ.ராமச்சந்திரன், ராகேஷ்குமார், சி.டி.மெய்யப்பன், பெ.விஸ்வநாதன், எம்.கிறிஸ் டோபர் திலக், மயூரா எஸ்.ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், பிரவீன் சக்கரவர்த்தி, ஆர்ம்ஸ்ட்ராங் பெர் னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் நாடு காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜோய்குமார் 18.1.2024 அன்று சென்னை வந் தார்.
கட்சியின் மாநில நிர்வாகிகள், வார் ரூம் பொறுப்பாளர்கள், கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்களுடன் இவர் நேற்று (19.1.2024) (மாலை ஆலோசனை நடத்தினார். அழகிரி தலைமையில், அஜோய் குமார் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறை, பிரிவுகளின் தலை வர்கள் ஆலோசனை கூட் டம் இன்று நடந்தது.
Saturday, January 20, 2024
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment