‘தந்தை பெரியாரின் மெய்க் காவலர்’ என்று போற்றப்படும் மாயவரம் நடராஜன் அவர் களின் மகன் ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் (வயது 91) நேற்று (19.1.2024) பெங்களூரு வில் மறைவுற்றார் என்ற தக வல் அறிந்து பெரிதும் வருந்து கிறோம். இவரின் இயற்பெயர் லெனின். அலுவல் துறையில் பல்வேறு இடர்ப் பாடுகள் இருந்த நிலையில், ஜெயச்சந்திரன் என்று பெயரை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
மாயவரம் நடராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாடு துறையில் நடத்தியபோது, அவ்விழாவிற்கு வந் திருந்து பெருமகிழ்ச்சி அடைந்தார். மாயவரம் நடராஜன் அவர்களின் சகோதரர் திரு.சி.சுப்பையா அவர்கள், பதிவுத் துறையில் பணியாற்றினாலும், பணிக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் இயக்கத் தோழர்களுக்குப் பேருதவியாக இருந்தவர்.
ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் அவர்கள் – புதுடில்லி இந்திய செய்தித்தாள்களின் பதிவாளர் அலுவலகத்திற்கு (RNI) ஆண்டுதோறும் அனுப்பப் படும் நமது ‘விடுதலை’ ஏடு மற்றும் பருவ இதழ் களின் விநியோகம் தொடர்பான ஆண்டறிக்கையினை தணிக்கை செய்து சான்றளித்து வந்தவர் – நம்மோடு எப்பொழுதும் தொடர்பில் இருக்கக் கூடிய கொள்கையாளர். ‘ஜனசக்தி’க்கும் அப் பணியை செய்து வந்தவர். இடதுசாரி தோழர்களுடன் நட்போடு பழகியவர்.
அவர் மறைவிற்குக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
(கி.வீரமணி),
சென்னை தலைவர்,
20.1.2024 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment