ஹவுரா நகர்(மே.வங்கம்),ஜன.4- வெளிநாட்டு வழக்குரைஞர்களை இந்தியாவில் தொழில் செய்ய அனுமதிக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு அகில இந்திய வழக் குரைஞர்கள் சங்கத்தின் 14 ஆவது அகில இந்திய மாநாடு கண்டனம் தெரிவித்துள்ளது.
வகுப்புவாதத்தை தோற்கடிப் போம்; ஜனநாயகத்தை காப் போம்; அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத் துடன் அகில இந்திய வழக்குரை ஞர்கள் சங்கத்தின் 14 ஆவது அகில இந்திய மாநாடு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நகரில் (நரா நாராயானா நக ரில்) அசோக் பக்ஷி அரங்கத்தில் டிசம்பர் 28- முதல் 30 வரை மூன்று நாட்கள் நடை பெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவரும் மாநிலங் களவை உறுப்பினருமான பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா தலைமை வகித்தார்.
வரவேற்புக் குழு தலைவரும், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி யுமான ஏ.கே.கங்குலி வரவேற்று உரையாற்றினார்.
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி தீபக் குப்தா மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற் றினார். வேலை- ஸ்தாபன அறிக்கையை பொதுச்செயலாளர் பி.வி.சுரேந்திர நாத், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் அனில் சவுகான் ஆகியோர் சமர்ப் பித்தனர்.
பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கெடுத்த வழக்குரைஞர்கள், ஜனநாயகத்திற்கு எதிராக செயல் படும் ஒன்றிய அரசின் செயல்கள் குறித்தும், தற்போது மாற்றப்பட் டுள்ள வழக்குரைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு எதிரான பல் வேறு சட்டங்கள் குறித்தும், பாசிசத்திற்கு எதிராக வழக் குரைஞர்களின் பங்கு குறித்தும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதி ராகவும், அரசமைப்புச் சட்டத் திற்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக் கைகளையும், இந்திய முழுவதும் சங்கத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் 10 மணி நேரத்திற்கு மேல் விவாதித் தனர்.
கருத்தரங்கம்
மாநாட்டை முன்னிட்டு சிறப் புக் கருத்தரங்கம் நடைபெற்றது. “நீதித் துறையும் – ஜனநாயகமும் என்கிற தலைப்பில் ஒடிசா மாநில உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், “கண்கா ணிப்பும் – பத்திரிகை சுதந்திரமும்” என்கிற தலைப்பில் டெலிகிராப் பத்திரிகை ஆசிரியர் ஆர்.ராஜகோபால் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியை அமல்படுத்த வேண்டும். கூட்டாட்சி தத்துவத் திற்கு எதிராக செயல்படும், மத்திய புலனாய்வு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. வெளிநாட்டு வழக்குரை ஞர்களை இந்தியாவில் தொழில் செய்ய அனு மதிக்கும் ஒன்றிய அரசின் முடி வுக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைகளுக்கும் கண்ட னம் தெரிவிக்கப்பட்டது. சுதந்திரமான நீதித்துறை, நீதி பதிகள் நியமனங் களில் வெளிப் படைத்தன்மை வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய தலைவராக பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, செயல் தலைவராக ராஜேந்திர பிரசாத், பொதுச்செய லாளராக சுரேந் திரநாத், பொருளா ராக அனில் சௌகான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டி லிருந்து 19 பேர் தேசி யக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட னர். இதில் அகில இந்திய துணைத் தலை வர்களாக ஏ.கோதண்டம், ஜி.சம்கி ராஜ், கே. இளங்கோ, அகில இந்திய இணைச்செயலாளராக என்.முத்து அமுதநாதன், துணைச் செயலாளராக எஸ்.சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். ஆர். ராமமூர்த்தி, கே.சுப்பு ராம், டி.நாகேந்திரன், எல். ஷாஜி செல்லன், ஏ.சங்கரன் ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களா கவும், எஸ்.மாசேதுங், கே.பாண் டீஸ் வரி, எஸ்.பொன்ராம், டி.சீனிவாச ராகவன், டி.ஜெயகுமார், பி.சீனிவா சன், வி.அனந்தசேகர், ஆர்.சரவணன் மற்றும் பி.எம்.முருகன் ஆகியோர் தேசியக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட் டில் 27 மாநிலங்களி லிருந்து 93 பெண் பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 573 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். டிசம்பர் 30 அன்று பொதுக் கூட்டத்துடன் மாநாடு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment